Sunday, May 15, 2016

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்- தோழர் லெனின்

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்- தோழர் லெனின்
பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றார் மாபெரும் ஆசான் தோழர் லெனின்.
ஆனால் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பன்றிகளைவிட கேவலமாக நடந்து கொள்கிறார்கள்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களுக்காக குரல் கொடுக்காமல் கட்டிப் பிடித்து அடித்துக் கொள்கிறார்கள்.
பாடசாலையில் பேப்பர் ராக்கட் விட்டால் குழப்படிகார மாணவன் என்று ஆசிரியரால் தண்டிக்கப்படுகிறான்
ஆனால் அதே பேப்பர் ராக்கட்டை பாராளுமன்றில் விட்டால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் என அழைக்கப்படுகிறான்.
இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் மற்றும் சலுகைகள் இதோ!
salary -54,485 Rs
fuel -30,000 Rs
transport-10,000 Rs
Entertainment- 10,000 Rs
mobile phone -2000 Rs
meeting each -500Rs
Current bill - free
Land line phone - free
train ticket first class free
Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons)
மற்றும்
Secretary
Vehicle
Quarters
Computers
Bodyguards
ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா.
ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே.
எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபா
இந்தளவு சம்பளம் பெறும் உறுப்பினர் பாராளுமன்றில் செய்வது, சண்டை பிடிப்பதும் ராக்கட் விடுவதும் கெட்ட வார்த்தைகளால் ஏசுவதுமே
இந்தியாவில்தான் பாராளுமன்றத்திலும் சட்டசபையிலும் ஒருவருக்கொருவர் கெட்ட வார்த்தைகளால் ஏசுவார்கள். சட்டையைக் கிழிப்பார்கள்., வேட்டியை உருவுவார்கள், மைக்கை உடைப்பார்கள்.
இந்தியாவில் இருந்து அனைத்தையும் இறக்குமதி செய்தவர்கள் இப்போது இந்த சண்டைக் கலாச்சாரத்தையும் இறக்குமதி செய்துள்ளார்கள்.
இது நல்லாட்சி அரசாம். இந்த அரசு தீர்வு தருமாம். எங்களை நம்பட்டாம். இந்த பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சம்பந்தர் அய்யா.

No comments:

Post a Comment