Sunday, May 15, 2016

•கலைஞர் கருணாநிதி தத்து எடுத்து வளர்த்த ஈழ அகதி சிறுவன் மணி எங்கே?

•கலைஞர் கருணாநிதி தத்து எடுத்து வளர்த்த
ஈழ அகதி சிறுவன் மணி எங்கே?
கலைஞர் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்கிறது தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு
1983ம் ஆண்டு ஈழ அகதி சிறுவன் மணியை தத்து எடுத்து வளர்த்தார் கலைஞர் கருணாநிதி. இப்போது அந்த சிறுவனைக் காணவில்லை.
இந்த சிறுவனுக்கு என்ன நடந்தது என்பதை கண்டு பிடித்து தருமாறு தமிழக முதலமைச்சர் ஜெயா அம்மையாருக்கு கடந்த வருடம் நான் மனு அனுப்பியிருந்தேன்.
தமிழக பத்திரிகைகள்.மனிதவுரிமை அமைப்புகள் என்பனவற்றுக்கும் இது குறித்து தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தேன்.
ஆனால் யாருமே இது குறித்து அக்கறை கொள்ளவில்லை. குறிப்பாக எந்த அரசியல் கட்சியுமே ஒரு அறிக்கைகூட கொடுப்பதற்கு முன்வரவில்லை.
நான் மட்டுமல்ல, ஸ்டாலினுடன் ஒன்றாக பல வருடம் இருந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியும்கூட இந்த சிறுவன் எங்கே என்று கேட்டிருக்கிறார்.
சொத்தில் பங்கு கொடுக்க வேண்டி வருமே என்ற காரணத்தினால் அந்த அகதி சிறவனை ஸ்டாலின் குடும்பம் அடித்து விரட்டிவிட்டதாக சிலர் கூறுகிறார்கள்.
இன்னும் சிலர் அந்த சிறுவன் ஸ்டாலினால் கொல்லப்பட்டுவிட்டான் என்று கூறுகின்றனர்.
கலைஞர் தன் தமிழப்; பாசத்தைக் காட்டுவதற்காக ஆடிய நாடகத்தில் அநியாயமாக ஒரு அப்பாவி அகதி சிறுவன் பலியாகிவிட்டான்.
கலைஞர் இது குறித்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். இல்லையேல் உண்மை அறியும்வரை போராடுவோம் என தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் இவ் அறிவித்தல் ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் ஆறுதல் தருவதாக இருக்கிறது.
அந்த அகதி சிறவன் எங்கே என்பதற்கு விடை கிடைத்தவிடும் என்ற நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.
குறிப்பு- தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு ஈழ அகதி சறுவனுக்காக போராடுகிறது. ஆனால் புலத்தில் இருக்கும் தமிழ்தேசிய ஊடகங்கள் இது பற்றி பேச மறுக்கின்றன.
என்னே அவலம் இது?
கீழ்வரும் இணைப்பில் தமிழ்நாடு மாணவர் கூட்மைப்பின் அறிக்கையை கேட்கலாம
https://www.facebook.com/1687740764816596/videos/1707744479482891/?pnref=story

No comments:

Post a Comment