Tuesday, May 31, 2016

•மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்றால் பெரிய கருப்பன் வெற்றியும் மகேசன் தீர்ப்பா?

•மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்றால்
பெரிய கருப்பன் வெற்றியும் மகேசன் தீர்ப்பா?
100 படம் ரிலீஸ் செய்த சரத்குமார் தோல்வி
150 படம் ரிலீஸ் செய்த விஜயகாந் தோல்வி
ஆனால் ஒரேயொரு பிட்டு படம் ரிலீஸ் செய்த பெரியகருப்பன் வெற்றி.
அதுவும் 40 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகளால் வெற்றி
மக்களுக்காக குடும்பத்தை விட்டு வந்து போராடும் உதயகுமார் தோல்வி
ஆனால் பிட்டு பட புகழ் பெரியகருப்பன் வெற்றி.
இதுதான் மகேசன் தீர்ப்பா?
இயக்குனர் பாலச்சந்தர் படத்தில் கதாநாயகன் விபச்சாரியை பார்த்து “அந்த தலைவர் சொல்வது போல் நீ ஒழுங்காக வாழலாம்தானே?” என்று கேட்க அதற்கு அந்த விபச்சாரி “அந்த தலைவர் பேசி முடித்த பின்பு தன்னிடம்தான் படுக்க வருவார்” என்று பதில் கூறுவார். இது தலைவர் கருணாநிதியைத்தான் மறைமுகமாக குறிப்பதாக அப்போது பேசிக்கொண்டார்கள்.
நான் மதுரை சிறையில் இருந்தபோது போஸ்ட்ஆபீஸ் வெடிகுண்டு வழக்கில் ஆயள்தண்டனை பெற்று இருந்த திமுக இளைஞரணி பொறுப்பாளர் ஜெயப்பெருமாள் என்பவரிடம் “ உங்கள் தலைவர் கருணாநிதி பல மனைவிகள் வைத்திருப்பதும் அதையும்விட பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதும் சரியா?” எனக் கேட்டேன்.
அதற்கு அவர் உடனே” தலைவருக்கு கெத்து இருக்கிறது. அதனால் பல பெண்களை வைத்திருக்கிறார். நீ ஏன் பொறாமைப்படுகிறாய்? என்று பதில் கூறினார்.
“அப்படியென்றால் நீயும் பல பெண்களுடன் தொடர்பு கொள்வாயா? என்று நான் திருப்பி கேட்டேன்.
“அதெப்படி? என் மனைவிக்கு துரோகம் செய்யக்கூடாது அல்லவா” என்றார்.
இந்த உரையாடலில் இருந்து நான் புரிந்துகொண்டது மக்கள் தாங்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் தலைவர்களிடம் அதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அதனால்தான் தன் பக்கத்தில் இரு மனைவிகளை வைத்தக்கொண்டு கொஞ்சம்கூட கூசாமல் கலைஞர் “ஒருவனுக்கு ஒருத்தியே தமிழர் பண்பாடு” என்று பேச முடிகிறது.
சோபன்பாபுவுடன் ஒன்றாக வாழ்ந்துவிட்டு எம்.ஜி.ஆர் இறந்ததும் தான் உடன்கட்டை ஏற நினைத்தாக ஜெயா அம்மையாரால் கூற முடிகிறது.
அமெரிக்க மக்கள் தாங்கள் எப்படி வாழ்ந்தாலும் தமது ஜனாதிபதி ஒழுக்கமாக வாழ வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
தமிழ் மக்கள் தாங்கள் ஒழுக்கமாக வாழ்ந்து கொண்டு தமது தலைவர்கள் எப்படியும் வாழலாம் என்று நினைக்கிறார்கள்.
அதனால்தான் பெரியகருப்பன் போன்றவர்கள் தேர்தலில் ஜெயிக்க முடிகிறது.
மகேசன் தீர்ப்பு இப்படி அமைந்துவிடுகிறது!

No comments:

Post a Comment