Wednesday, January 30, 2019

கேட்டதோ 1000 ரூபா சம்பளம் கிடைத்ததோ 700 ரூபா மட்டுமே

•கேட்டதோ 1000 ரூபா சம்பளம்
கிடைத்ததோ 700 ரூபா மட்டுமே
ஏன் இப்படி நடந்தது?
தோட்ட தொழிலாளார்கள் 1000ரூபா சம்பள உயர்வு கேட்டு போராடினார்கள்.
அவர்களது கோரிக்கைக்கு ஆதரவாக அனைத்து கட்சியினரும் குரல் கொடுத்தார்கள்.
ஆனாலும் அவர்களுக்கு 700 ரூபா மட்டுமே வழங்குவதற்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்து போராடினால் அனைத்து உரிமையும் பெற முடியும் என்றார்கள்
ஆசியாவிலேயே பெரிய தொழிற்சங்கமாகிய தோட்ட தொழிலாளர் சங்கத்தினால் ஏன் சம்பள உயர்வைக்கூட பெற முடியவில்லை?
இனப்பிரச்சனைக்கே பாராளுமன்ற பாதைமூலம் தீர்வு காண முடியும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் மலையக பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏன் சம்பள உயர்வைக்கூட பெற முடியவில்லை?
இழப்பதற்கு எதுவு மற்ற மக்கள் போராடினால் அவர்கள் வெல்லப்படுவதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது என்றார் மார்க்ஸ்
ஆனால் இந்த தோட்ட தொழிலாளர்களால் தமது சம்பள உயர்வைக்கூட போராடி வெல்ல முடியவில்லையே?
ஏனென்றால் இங்கு தோட்ட முதலாளிகளின் கூட்டாளிகளே தொழிலாளர்களின் தலைவர்களாக இருக்கிறார்கள்.
இந்த தலைவர்களே அவர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கின்றனர்.
இந்த தலைவர்களை தூக்கியெறியும்வரை தோட்ட தொழிலாளர்களுக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை.
குறிப்பு - இலங்கை என்னும் சிறிய நாட்டில் 4 இந்திய தூதரகம் உண்டு. அதில் ஒரு தூதரகம் கண்டியில் உண்டு. மலையக தோட்ட தொழிலாளர்களின் நலனுக்காக இந்த தூதரகம் அமைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் இந்த இந்திய தூதர் அந்த மக்களின் சம்பள உயர்வுக்காக ஒருமுறைகூட குரல் கொடுக்கவில்லை. அப்புறம் என்ன ம - - க்கு அங்கே தூதரகம் வைத்திருக்க வேண்டும்?

No comments:

Post a Comment