Wednesday, January 30, 2019

•இந்திய அரசின் இரட்டை முகமும் ஐபிசி யின் உண்மை முகமும்

•இந்திய அரசின் இரட்டை முகமும்
ஐபிசி யின் உண்மை முகமும்
தமிழகத்தில் உள்ள 10 பல்கலைக்கழகங்களில் வடமாகாண மாணவர்கள் கல்வி கற்க முடியும் என யாழ் இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார்.
நன்றாக கவனியுங்கள். இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் அல்ல மாறாக தமிழகத்தில் உள்ள 10 பல்கலைக்கழகத்தில் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல இலங்கை தமிழ் மாணவர்கள் அனைவருக்கும் என்றும் கூறாமல் வடமாகாண மாணவர்களுக்கு என்றே கூறியுள்ளார்.
சரி. பரவாயில்லை. வடமாகாண மாணவர்களுக்காவது வாய்ப்பு கொடுக்கின்றார் என்று திருப்தி படலாம்.
ஆனால் வடமாகாண மாணவர்களுக்கு தமிழக பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு கொடுக்கும் இந்திய தூதுவரும் அவருடைய இந்திய அரசும் தமிழ் நாட்டில் உள்ள அகதி மாணவர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள்?
அகதி என்பதால் தமிழ்நாட்டில் உள்ள அகதி மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தேவையான புள்ளிகள் பெற்றிருந்தும் அகதி என்பதால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
வடமாகாண தமிழ் மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நீங்கள் ஏன் தமிழ்நாட்டில் இருக்கும் அகதி மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது என்று யாரும் இதுவரை இந்திய தூதரைக் கேட்கவில்லை.
தலைவர்கள்தான் கேட்கவில்லை. ஊடகங்களாவது கேட்டிருக்கலாம். அதுவும் தன்னை தமிழ் தேசிய ஊடகம் என்று கூறிக்கொள்ளும் ஐபிசி யாவது கேட்டிருக்கலாம்.
“படம் எடுக்கப் போன தமிழர் நடிகை திரிசாவுடன் படுத்தார். இன்னொரு தமிழரின் மகள் காப்பிலியுடன் ஓடி விட்டாள்” என்று வீடீயோ எடுத்து வெளியிடும் ஐபிசி முதலாளி இதற்கு ஒரு வீடியோ எடுத்து விட ஏன் முன்வரவில்லை?
அதுவும் முன்னாள் போராளிகளுக்காக அக்கறை கொண்டு உறவுப்பாலம் நிகழ்ச்சி செய்வதாக கூறும் இந்த ஐபிசி முதலாளி தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்காக ஏன் நிகழ்ச்சி நடத்துவதில்லை?
சரி பரவாயில்லை. லண்டன் தமிழ் அமைப்புகள் ஏன் ஒற்றுமையாக அதைச் செய்யவில்லை? இதைச் செய்யவில்லை? என்று நிகழ்ச்சி நடத்தும்வேளை 28 வருடமாக சிறையில் இருக்கும் ஏழு தமிழர் ஏன் விடுதலை செய்யப்படவில்லை என்று ஒரு உரையாடலை நடத்தலாமே.
அதுவும் முருகனின் மகள் லண்டனில்தானே இருக்கிறார். அவர் தன் தாய் தந்தையரை சென்று பார்ப்பதற்குகூட விசா வழங்காமல் இந்திய அரசு கொடுமை செய்கிறதே. அதைப்பற்றியாவது ஒரு கண்டன உரையாடலை நடத்தலாமே?
இத்தனை ஊடகங்கள் இருக்கும்போது ஐபிசி யை மட்டும் ஏன் நான் கேட்பதாக உங்களில் சிலருக்கு தோன்றலாம்.
ஏனென்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. தமிழக கலைஞர்களை அழைக்கக்கூடாது என்றும் ஈழத்து கலைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வெளிப்படையாக தைரியமாக கூறி வருகிறார்கள்
தமிழக கலைஞர்களை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு ஈழத்து தமிழக தமிழர்களின் மத்தியில் எற்பட்டுவரும் ஜக்கியத்தை குழப்ப முனைகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது.
ஏனெனில் தமிழ் மக்கள் மத்தியில் எழுச்சிபெறும் மக்கள் இசைக் கலைஞர்களையும் இவர்கள் தமிழக கலைஞர்கள் என்ற பேரில் மறுக்கிறார்கள்.
இவர்களின் இந்திய எதிர்ப்பு என்பது உலக தமிழர்கள் அனைவரும் தமிழர் என்ற ரீதியில் ஒன்றாவதை குழப்புவதாகவே இருக்கிறது.
ஐபிசி யின் உண்மை முகம் இதுதானா?
குறிப்பு- ஐபிசி யை விமர்சித்தால் வீடு தேடி வந்து மிதிப்போம் என்று வீடீயோ விட்டு மிரட்டுறாங்க. இந்த பதிவுக்கு என்ன பண்ணப்போறாங்களோ ஒரே பயமாய் இருக்கு😃

No comments:

Post a Comment