Wednesday, January 30, 2019

•யாழ் இந்திய தூதரின் மகாத்மா காந்தியும்

•யாழ் இந்திய தூதரின் மகாத்மா காந்தியும்
கேப்பாப்புலவு மக்களின் அகிம்சை போராட்டமும்
யாழ் இந்திய தூதர் மகாத்மா காந்தியின் 71வது நினைவு தினத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாடியுள்ளார்.
இந்த விழாவில் யாழ் மேயர் ஆர்னோல்ட் மற்றும் மாகாணசபை அவைத்தலைவர் சிவஞானம் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் 20 காந்திசிலைகளை நிறுவ யாழ் இந்திய தூதர் தீர்மானித்துள்ளார்.
இந்தியாவில் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேக்கு சிலை வைத்து வணங்குகிறார் பிரதமர் மோடி.
ஆனால் யாழ் இந்திய தூதர் யாழ்ப்பாணத்தில் காந்தியை கொண்டாடுகிறார்
காந்திக்கும் ஈழத் தமிழருக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக காந்தியை எம்மீது இவர் திணிக்கின்றார்?
சரி. பரவாயில்லை. ஆகக்குறைந்தது காந்தியின் கொள்கையை இந்த தூதுவராவது கடைப்பிடிக்கிறாரா? இல்லையே!
கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தைக் கேட்டு காந்தி சொன்ன அகிம்சை வழியிலேயே போராடுகிறார்கள்.
அவர்களின் நிலத்தை இதுவரை கொடுக்காதது மட்டுமன்றி போராடும் மக்கள் மீது வழக்கு போடுகிறது அரசும் பொலிசும்.
நீதிமன்றம் கூறியபடி தொலைவில் இருந்து போராட்டம் நடத்தினாலும் அம் மக்களை புலனாய்வு பொலிசார் போட்டோ பிடித்து அச்சுறுத்துகின்றனர்.
ஆனால் பிரதமர் ரணிலுக்காக நீதிமன்றம் சென்று ஜனநாயகத்தை நிலைநாட்டியதாக பெருமிதம் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் இந்த மக்களுக்காக நீதிமன்றம் வரவில்லை.
சுமந்திரன் அவர்கள் இந்த மக்களுக்கு நிலத்தை பெற்றுக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் போராட்டத்திற்கு பொலிசாரிடமிருந்து வரும் அச்சுறுத்தலையாவது நிறுத்தி உதவியிருக்கலாம்.
சொந்த நிலம் கேட்டு குழந்தைகள் வீதியில் கிடந்து போராடுகின்றன. ஆனால் யாழ் இந்திய தூதர் காந்தி சிலைகளை நிறுவி கொண்டாடுகிறார்.
காந்தி சொன்ன அகிம்சை வழியில் போராடி எந்த தீர்வையும் பெற முடியவில்லை என்பது மட்டுமல்ல அகிம்சை வழியில் போராடுவதற்கே இலங்கை அரசு அனுமதிக்குதில்லை.
கேப்பாப்புலவு மக்களின் அகிம்சை போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய யாழ் இந்திய தூதர் அது பற்றி வாய் திறக்கவே மறுக்கிறார்.
யாழ் இந்திய தாதருடன் சேர்ந்து காந்தி விழா கொண்டாடும் யாழ் மேயரும் அவைத்தலைவரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது மட்டுமன்றி ஆதரவாக குரல் கொடுக்கவும் இல்லை.
அப்படியென்றால் இவர்கள் எதற்காக தமிழ் மக்கள் மத்தியில் காந்தி சிலைகளை நிறுவி கொண்டாடி வருகின்றனர்?

No comments:

Post a Comment