Wednesday, January 30, 2019

இந்தியாவை ஈழத் தமிழர் பயன்படுத்த முடியுமா?

•இந்தியாவை ஈழத் தமிழர் பயன்படுத்த முடியுமா?
இந்துத் தமிழீழம் கேட்டால் இந்தியாவை பயன்படுத்த முடியும் என காசி ஆனந்தன் அய்யா கூறுகிறார்.
சீனா வருகிறது. எனவே இந்தியா தனக்காக தமிழீழத்தை ஆதரிக்கும். அப்போது இந்தியாவை பயன்படுத்த முடியும் என திருநாவுக்கரசு கூறுகிறார்.
இவர்கள் இருவரும் இந்தியாவில் இருக்கின்றனர். எனவே வேறு வழியில்லாமல் இந்தியாவுக்கு ஆதரவான கருத்தை கூறுகின்றனர் என கருதலாம்.
ஆனால் யாரோ ஒரு அதிகாரி சொன்னதை நம்பி இந்தியாவை பயன்படுத்த எண்ணி ராஜீவ் கொலைக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என்று சுவிஸ்சிலிருந்து அறிக்கை விட்டவர்களை என்னவென்று கருதுவது?
முன்பு காங்கிரஸ் காலத்தில் நாராயணன் போன்ற அதிகாரிகள் இடைக்கிடை சம்பந்தர் அய்யாவை அழைத்து பேசுவார்கள்.
இப்போது மோடி காலத்தில் அதுவும் இல்லை. இல.கணேசனை பிடித்து மோடியை சந்திக்க முடியுமா என பார்க்கிறார்கள்.
வேடிக்கை என்னவெனில் இல.கணேசனை சந்திக்ககூட அப்பாயிண்மென்ட் இவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லையாம்.
மகிந்த ராஜபக்சகூட நினைத்த நேரத்தில் இந்தியா போய் மோடியை சந்திக்க முடிகிறது.
ஆனால் பாவம் சம்பந்தர் அய்யா இல.கணேசன் அர்யுன் சம்பத்; அப்பாய்ண்ட்மென்டுக்காக காத்து இருக்கிறார்.
ஆனால் சுமந்திரன் “ இந்தியா மட்டுமல்ல சீனா ரஸ்சியா எல்லாம் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுதர தயாராக இருக்கிறார்கள்” என்று கூறுகிறார்.
1977ல் இந்த தமிழ் தலைவர்கள் “ இலுப்பம்பழம் பழுத்தால் வெளவால் வரும் என்றும் இந்தியா வந்து தமிழீழம் பெற்று தரும் என்றும் கூறி ஏமாற்றினார்கள்.
இன்று இத்தனை அழிவுக்கு பின்பும் இந்தியாவை பயன்படுத்த முடியும் என்று வெளவால் கதைகளை கூறுகிறார்கள்.
இவர்களுக்கு பத்மநாபா கூறிய வார்த்தையை நினைவுபடுத்த விரும்புகிறோம் “ இந்தியாவை பயன்படுத்த நாங்கள் நினைத்தோம். ஆனால் இந்தியா எங்களை பயன்படுத்தி விட்டது” என்று நாபா கூறியது இன்றும் பொருத்தமாகவே இருக்கிறது
.
இந்தியாவில் தன் சொந்த சிறுபான்மை மக்களை நசுக்கும் இந்திய அரசு இலங்கையில் தமிழ் சிறுபான்மை மக்களுக்கு உதவும் என்று ஒரு அடி முட்டாள் மட்டுமே நம்ப முடியும்.

No comments:

Post a Comment