Saturday, August 29, 2020

•இது தியாகிகள் துரோகிகளாகவும் துரோகிகள் தியாகிகளாகவும் ஆகும் காலம்!

•இது தியாகிகள் துரோகிகளாகவும் துரோகிகள் தியாகிகளாகவும் ஆகும் காலம்! ஈழப் போராட்டத்தின் முதல் தியாகி சிவகுமாரன் பிறந்த நாள் இன்று அகும். (26.08.1950 – 05.06.1974) அவர் தனது 24 வயதில் விதையானார். அவரில் இருந்து பல்லாயிரம் போராளிகள் முளைத் தெழுந்தார்கள். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்று அவரின் வயது 70 ஆக இருக்கும். மற்றவர்கள் போல் அவரும் ஏதாவது ஒரு வெளிநாடு சென்று வசதியாக வாழ்ந்திருக்கலாம். அல்லது பாராளுமன்ற அரசியலில் புகுந்து ஒரு எம் பி யாகவும் ஆகியிருக்கலாம். ஆனால் அவரோ தமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி தன் வாழ்வை அர்ப்பணித்தார். உலகில் கொடியது இன விடுதலைக்காக 24 வயதில் மரணமடைவது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தன் மகனின் உடலை 24 வயதில் பிணமாக பார்க்கும் தாயின் நிலையே கொடியது என நான் கருதுகிறேன். இந்த கொடுமையை சிவகுமாரனின் தாயார் அனுபவித்தார். அவர் அனுபவித்த அந்த கொடுமையை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த இடத்தில் “தாய்” நாவலைப் படைத்த மார்க்சிம் கார்க்கி மீது கொஞ்சம் பொறாமை கொள்கிறேன். ஏனெனில் அவரின் திறமையில் கொஞ்சமேனும் எனக்கிருந்தால் அவர் காட்டிய ரஸ்சிய தாய்க்கு ஒப்பான பல ஈழத் தாய்களை என்னால் காட்டியிருக்க முடியும். இப்போது எனது கவலை எல்லாம் இந்த தியாகிகளைப் பற்றி எழுதவில்லையே என்பது அல்ல. மாறாக தியாகிகளை துரோகிகளாகவும் துரோகிகளை தியாகிகளாகவும் மாற்ற சிலர் முற்படுகிறார்கள். அதை தடுக்க என்னால் எதுவும் எழுத முடியவில்லையே என்பது பற்றியே நான் கவலை கொள்கிறேன். தியாகி சிவகுமார் துரையப்பாவை துரோகி என்றார். அவரை கொல்ல பலமுறை முயன்றார். ஆனால் இப்போது சிலர் துரையப்பாவை தியாகி ஆக்கிறார்கள். இவர்கள் இனி விரைவில் தியாகி சிவகுமாரனை துரோகியாக்குவார்கள். ஏனெனில் இது தியாகிகள் துரோகிகளாகவும் துரோகிகள் தியாகிகளாகவும் ஆக்கும் காலம். த்தூ ....... ! Image may contain: 1 person, text

No comments:

Post a Comment