Saturday, August 29, 2020

•எது நடக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டதோ

•எது நடக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டதோ அது நன்றாகவே நடந்து விட்டது! சுமந்திரன் தனது தோல்வியை ஒத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் தனது கட்சியின் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனாலும் தனது கட்சியின் தோல்விக்கு தானே காரணம் என்பதையும் அவர் எற்றுக்கொள்ளவில்லை. மாறாக கட்சியின் செயற் திறன் அற்ற நிலையே தோல்விக்கு காரணம் என்கிறார். இவர் கேட்டவுடன் இவரைக் கணக்கு கேட்ட மகிளிர் அணிப் பொறுப்பாளர் மீது வழக்கத்திற்கு மாறாக கட்சி உடன் நடவடிக்கை எடுத்தது. இருந்தும் கட்சி செயற் திறன் அற்றது என்கிறார். யாழ் மாவட்டத்தில் அதிகளவு விருப்பு வாக்கு பெற்றது மகிந்த கட்சியை சேர்ந்த அங்கஐன் ராமநாதன். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு விருப்பு வாக்கு பெற்றது மகிந்த ஆதரவு பிள்ளையான். சுமந்திரனும் சம்பந்தரும் மானஸ்தர்களாக இருந்தால் இதற்காகவே தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். சரி. பரவாயில்லை. தேர்தல் நேர்மையாக நடைபெற்றது என்று தேர்தல் திணைக்களம் கருதினால் பின்வரும் மூன்று கேள்விகளுக்கு பதில் தர வேண்டும். (1) யாழ் மாவட்டத்தை விட அதிகளவு வாக்குகள் கொண்ட மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் மாவட்ட முடிவு அறிவிக்க தாமதமானது ஏன்? (2) மூன்று வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு வீடியோவில் சுமந்திரனுக்காக தனது முடிவு மாற்றப்பட்டதாக சித்தார்த்தன் விசனப்படுகிறார். இது ஏன் நடந்தது? (3) இன்னொரு வீடியோவில் சசிகலா ரவிராஜ் அழுது கொண்டு வெளியேறுகிறார். அவரது மகள் “அப்பாவைக் கொன்ற மாதிரி எங்களையும் கொன்று விடுவார்கள். வா அம்மா போய்விடுவோம்” என்கிறார் அழுதபடியே. தனது வெற்றி சுமந்திரனுக்காக மாற்றப்பட்டு விட்டது என சசிகலா ரவிராஜ் கூறுகிறார். இது ஏன் நடந்தது? மாலை 6 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டு இரவு 12 மணிவரை முடிவு அறிவிக்காமல் தாமதப்படுத்திய வேளையில்தான் இவை நடைபெற்றன. யாரோ ஒருவருக்காகவே இது நடை பெற்றுள்ளது என்று எழும் நியாயமான சந்தேகத்தை தேர்தல் திணைக்களம் போக்குமா? குறிப்பு - இந்த தேர்தலில் சுமந்திரனை மட்டுமல்ல சம்பந்தர் ஐயாவையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளார்கள் என்பதே உண்மை. Image may contain: 2 people, including Lingadurai K, close-up

No comments:

Post a Comment