Saturday, August 29, 2020

இந்திய நீதி?

இந்திய நீதி? வீரப்பன் வழக்கில் 1993 மே மாதம் கர்நாடக அதிரடிப்படையால் கைது செய்யப்பட்ட மார்ட்டல்லி பிலவேந்திரன் நேற்று (19.8.2020) இரவு 11 மணிக்கு மைசூர் சிறையில் உயிரிழந்துள்ளார். பொய் வழக்கில் 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர் உரிய சிகிச்சை வழங்கப்படாமல் சிறையில் மரணமடைந்துள்ளார். பம்பாய் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர் நடிகர் சஞ்சய் தத். அவரிடமிருந்து ஏகே 47 ஆயுதங்கள்கூட கைப்பற்றப்பட்டிருந்தன. அவருக்கு நீதிமன்றம் தண்டனையும் வழங்கியிருந்தது. ஆனால் அவர் இந்திய அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். தற்போது தனது நோய்க்கு சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவும் இருக்கிறார். வீரப்பனுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட பிலவேந்திரன் 27 வருடங்கள் சிறையில் கழித்தபோதும் அவரை அரசு விடுதலை செய்யவில்லை. அதுமட்டுமல்ல அவருக்கு உரிய சிகிச்சைகூட பெறவிடாமல் சாகடித்துவிட்டது. 72 கொலைகள் செய்த கொள்ளைக்காரி பூலான்தேவிக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர் பாராளுமன்ற எம்.பி யாகவும் இந்திய அரசு உதவியது. ஆனால் வீரப்பன் சதி செய்து கொல்லப்பட்டார். அதுமட்டுமல்ல வீரபன் அணியில் கைது செய்தவர்களையும் விடுதலை செய்ய அரசு மறுப்தற்கு என்ன காரணம் என்பதை உணர்வதற்கு அவர் முன்வைத்த கோரிக்கைகள் சிலவற்றை பார்க்க வேண்டும். கொலைகாரன், கொள்ளைக்காரன், கடத்தல்காரன் என்று அழைக்கப்படும் வீரப்பன் முன் வைத்த கோரிக்கைகள் சில, (1) 10ம் வகுப்புவரை தமிழ் வழிக் கல்வி வேண்டும் (2) வாசாத்தியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் (3) தடா சட்டத்தில் அடைக்கப்பட்ட அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் (4) பெங்களுரில் மூடப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறக்க வேண்டும் (5) காவிரி பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இப்போது புரிகிறதா? ஏன் இந்திய அரசு தமிழருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு இன்னொரு நீதி வழங்குகிறது என்று. No photo description available. Image may contain: செந்தழல், standing Image may contain: 1 person, close-up Image may contain: 4 people, people standing

No comments:

Post a Comment