Monday, August 31, 2020

மரணம் ஒருவரின் தவறுகளை மன்னித்துவிடுமா?

•மரணம் ஒருவரின் தவறுகளை மன்னித்துவிடுமா? எந்தளவுதான் அயோக்கியனாக இருந்தாலும் அவன் மரணமடைந்துவிட்டால் அவனது அயோக்கியத்தனத்தை விமர்சிக்க கூடாது என்று ஒரு மரபு எம்மத்தியில் இருக்கிறது. இது தொடர்பாக கவிஞர் தாமரை கூறிய கருத்துகள் கவனிக்கத்தக்கவை. பாராட்டுக்குரியவை. “சாவதினாலேயே ஒருவர் 'புனித'ராகி விடமாட்டார். செத்தவர்களை விமர்சிப்பதில்லை என்பது தமிழர் நன்மரபு ! எனினும் மரபுகளுக்கும் காலாவதி உண்டு ; காலத்துக்கேற்ற மாற்றம் உண்டு. செத்தாலும் அயோக்கியன் அயோக்கியனே என்று சொல்லப் பழகுவோம். செத்தாலும் அயோக்கியன் புனிதனாக முடியாது என்பதைப் புது மரபாக்குவோம்” என்று கவிஞர் தாமரை கூறியுள்ளார். Image may contain: Kavignar Thamarai

No comments:

Post a Comment