Saturday, August 29, 2020

கம்போடியா - அங்கவாட் கோயில்கள்

கம்போடியா - அங்கவாட் கோயில்கள் 1998ம் ஆண்டு எனது எட்டு வருட சிறை வாசத்தின் பின் நான் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டபோது தவிர்க்க முடியாமல் கம்போடியா நாட்டுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. உண்மையைக் கூறினால் எனக்கு கம்போடியா பற்றி எதுவுமே அப்போது தெரிந்திருக்கவில்லை. ஈழத் தமிழர்கள் தங்குவதற்கு தேவையான விசாவை அந்நாடு தருகிறது. எனவே அங்கு செல்லுங்கள் என நண்பர்கள் கூறியதால் அங்கு சென்றேன். ஆச்சரியம் என்னவெனில் அந் நாட்டில் நான் சுமார் பத்து மாதம்தான் தங்கியிருந்தேன். ஆனால் அங்கு பெற்ற நினைவுகள் இன்றும் மறக்காமல் இருக்கின்றன. கடந்த வருடம் இதே நாளில் கம்போடிய முருங்கக்காய் பற்றி எழுதியிருந்தேன். அப்போது அங்கவாட் பற்றி எழுதுவதாகவும் கூறியிருந்தேன். இன்று தோழர் தம்பிராஜா அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக அங்கவாட் கோயில்கள் பற்றி நிறைய கதைத்தோம். நான் இத்தனை நாளும் அங்கவாட் கோயில்கள் சோழ மன்னனால் கட்டப்பட்டது என்று நினைத்திருந்தேன். ஆனால் இன்று தம்பிராஜா அவர்கள் அது பல்லவ மன்னனால் கட்டப்பட்டது என்று கூறினார். கம்போடியா நாடு இன்று ஒரு முழு பௌத்தநாடாக விளங்குகிறது. இருப்பினும் அவர்கள் தமது தேசியக்கொடியில் அங்கவாட் இந்துக் கோவிலையே இப்போதும் வைத்திருக்கின்றனர். அங்கவாட்டுக்கு போகும்வரை இப்படி ஒரு பெரிய பிரமாண்டமான இந்துக் கோவில்கள் அங்கு இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை. டென்மார்க்கில் இருந்து வந்த ராஜா என்ற நண்பரே என்னையும் சபா(ரத்தி) என்பவரையும் அழைத்துச் சென்று இவற்றை காணச் செய்தார். அவருக்கு இவ் வேளையில் மீண்டும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான் கம்போடியாவில் இருந்த வேளையில்தான் பொல்பொட் அவர்கள் மரணமடைந்தார். அவர் பத்து லட்சம் மக்களை கொன்றதாக ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் அது உண்மையா? அவர் பற்றிய கம்போடிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பன பற்றி விரைவில் இன்னொரு பதிவில் எழுதுகிறேன். குறிப்பு - இன்று புகைப்பட தினமாம். நானும் நாலு படம் போட்டாச்சு. Image may contain: Balan Chandran, standing and indoor Image may contain: sky and outdoor Image may contain: 4 people, outdoor Image may contain: people standing, sky, cloud, outdoor and nature

No comments:

Post a Comment