Thursday, November 30, 2023

மறந்து போகுமோ எம் மண்ணின் வாசனை

"மறந்து போகுமோ எம் மண்ணின் வாசனை தொலைந்து போவமோ இந்த தூர தேசத்தில் ஏக்கமுடன் நாம் எழுப்பும் குரல் எம் உறவுகளுக்கு கேட்கிறதா?" எத்தனை தடைகள், அத்தனையும் தமிழ் மக்களால் உடைக்கப்பட்டன. எத்தனை இகழ்வு பேச்சுக்கள். அத்தனைக்கும் தமிழ் மக்கள் தமக்கே உரிய பாணியில் பதில் அளித்தனர். மாவீரர்களை பயங்கரவாதிகள் என்றோ மாவீரர்களை பாசிசவாதிகள் என்றோ கூறி வருபவர்களுக்கு தேவை மக்கள் பதில் என்றால் அதை மக்கள் போதிய அளவிற்கு வழங்கியுள்ளனர். சர்வதேசமே வியக்கும் அளவிற்கு ஒன்று திரண்டு தமக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்துள்ளனர் தமிழ் மக்கள். குறிப்பாக வழக்கத்தைவிட இம்முறை அடுத்த சந்ததியினர் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். புலம்பெயர் ஈழத் தமிழரின் செயற்பாடுகள் தமக்கு உத்வேகத்தை கொடுத்ததாக புலம்பெயர் சீக்கியர்கள் கூறுகின்றனர். குர்திஷ் அமைப்புகள் புலம்பெயர் ஈழத் தமிழ் அமைப்புகளுடன் நட்புறவு பேண விரும்புகின்றன. புலம்பெயர்ந்த தமிழர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேசத்திற்கு கூறும் செய்தி ஒன்றுதான். அது ஓட முடியவில்லை என்றால் நடந்து செல்வோம் நடந்து செல்ல முடியவில்லை என்றால் தவழ்ந்தாவது செல்வோம் ஆனால் ஒருபோதும் இயங்குவதை நிறுத்த மாட்டோம்!

No comments:

Post a Comment