Friday, March 22, 2024

1910 ஆண்டு கிளாரா ஐட்கின் தலைமையில்

1910 ஆண்டு கிளாரா ஐட்கின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களின் பிரச்சனைக்கு உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1917ம் ஆண்டு மார்ச் 8 ம் திகதியன்று பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர் இந்த தினமே உலக மகிளிர் தினமாகும் இந்த அமைப்பில் முதலாளிகளுக்கு இலாபத்தை தருகிற வேலை மட்டுமே ஆக்கபூர்வமான வேலையாக கருதப்படுகிறது. இதன்படி பெண்கள் வீடுகளின் நான்கு சுவர்களுக்குள் செய்யும் உழைப்பு பயனற்ற வேலை என்றே கருதப்படுகிறது. இதை கவனிக்க வேண்டியது பெண் செய்யவேண்டிய முதல் காரியம் என்றார் ரோசா லக்சம்பேர்க் பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவது எப்போது? பொருளாதார நிலைமைகள் மாறி உற்பத்திக் கருவிகள் மீண்டும் சமூகத்தின் உடமையாகும்போது நிச்சயமாக அது முடிவுக்கு வரும். உற்பத்தியில் சமபங்குடையவராகப் பெண்ணின்நிலை மீட்கப்படும். அப்போது திருமணமும் ஒருதார முறையும் நிலைக்குமா என்பதை இப்போது கூறுவது கடினம். ஆனால் வேறுபட்ட பொருளாதார நிலைமைகள் வேறுபட்ட விதமான சமுதாயத்தை உருவாக்கும். அவ்வாறு மாறிய பொருளாதார சமூகநிலைமைகளின் கீழ் வாழும் மக்கள் தாம் வேண்டும் சமூக அமைப்பு எப்படியானதாயிருக்க வேண்டும் என்பதுபற்றி தமது சொந்த முடிவுகளை எடுப்பர். அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாயிருப்பர் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment