Sunday, April 30, 2017

•சுமந்திரனை விலைக்கு வாங்கலாம் ஆனால் தமிழ் மக்களை ஒருபோதும் வாங்கிவிட முடியாது!

•சுமந்திரனை விலைக்கு வாங்கலாம்
ஆனால் தமிழ் மக்களை ஒருபோதும் வாங்கிவிட முடியாது!
சுமந்திரன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்
சுமந்திரன் தமிழ்தேசியகூட்டமைப்பு பேச்சாளர்
சுமந்திரன் தமிழ் மக்கள் பிரநிதியாக வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் பேசுபவர்.
எனவே சுமந்திரனை விலைக்கு வாங்கிவிட்டால் ஒட்டுமொத்த தமிழ்மக்களையும் வாங்கிவிடலாம் என இலங்கை அரசு நினைக்கிறது.
அதனால்தான் சுமந்திரனுக்கு,
பிரதமர் ரணில் கோடிக் கணக்கான ரூபாய்களை வழங்கினார் ( ஆதாரம்- சுரேஸ் பிரோமச்சந்திரன் கூறிய இக் குற்றச்சாட்டை சுமந்திரன் இன்னும் மறுக்கவில்லை)
சுமந்திரன் மட்டுமன்றி அவரது குடும்பத்தவர்கள் பயணிப்பதற்கும் சொகுசு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து என்று பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுபோதாது என்று சுமந்திரனின் நீண்டநாள் ஆசையான ஜனாதிபதி சட்டத்தரணி என்ற பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
சுமந்திரனுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பதவி மீது ஆசை என்றால் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பெற்றிருக்கலாம். அல்லது எம்.பி பதவியில் இருக்கும்வரை ஜனாதிபதி சட்டத்தரணி பதவியை பெறாமல் விட்டிருக்கலாம்.
ஆனால் ஆசை வெட்கம் அறியாது என்பார்கள். அதுபோல் பதவிகள் மீது உள்ள சுமந்திரனின் ஆசை இந்த வெட்கம் குறித்து கவலைப்படவில்லை.
சுமந்திரன் விலை போகலாம். ஆனால் தமிழ் மக்கள் ஒருபோதும் விலை போக மாட்டார்கள்.
இதேபோன்றுதான் முன்னர் லக்ஸ்மன் கதிர்காமர் என்று ஒருவர் அமைச்சராக இருந்தார். அவருக்கு பல பதவிகளையும் சலுகைகளையும் அன்றைய இலங்கை அரசு வழங்கியது.
அவருக்கு ஆசை நாயகிகளைக்கூட அன்றைய இலங்கை அரசு வழங்கியது என்றுகூட பரவலாக பேசப்பட்டது. அவரும் அதற்காக தமிழ் இனத்தை காட்டிக் கொடுத்தார்.
ஆனால் பாவித்துவிட்டு எறியப்படும் கறிவேப்பிலை போல் இலங்கை அரசும் லக்ஸ்மன் கதிர்காமரை பயன்படுத்திவிட்டு இறுதியில் சாகடித்துவிட்டது.
இலங்கை அரசு விரும்பியிருந்தால் கதிர்காமரை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் தேவையான அளவு அவரை பயன்படுத்திவிட்டு தேவையில்லை என்றவுடன் கைகழுவி விட்டுவிட்டார்கள்.
இதேநிலைமைதான் நாளைக்கு சுமந்திரனுக்கும் வரப் போகிறது. இன்று அவரை விலைக்கு வாங்கி அவரை தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு பயன்படுத்துகிறது.
நாளைக்கு அவர் தேவையில்லை என்றவுடன் அவரை வழக்கம்போல் இலங்கை அரசு கை கழுவும். அப்போது இதனை சுமந்திரன் நிச்சயம் உணர்ந்து கொள்வார்.
சுமந்திரனை விலைக்கு வாங்கினால் தமிழ் மக்களை வாங்கிவிட முடியும் என்ற இலங்கை அரசின் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை.
சுமந்திரன்களையும் கடந்து தமிழ் மக்களின் போராட்டம் நிச்சயம் தொடரும். வரலாறு இதனை நிரூபிக்கும்.

No comments:

Post a Comment