Sunday, April 30, 2017

•உண்ணாவிரதம் இருந்த அன்னை பூபதியை கொன்றுவிட்டு காந்தி சிலைகளை வைக்க இந்தியாவுக்கு என்ன தகுதி இருக்கு?

•உண்ணாவிரதம் இருந்த அன்னை பூபதியை கொன்றுவிட்டு
காந்தி சிலைகளை வைக்க இந்தியாவுக்கு என்ன தகுதி இருக்கு?
குறிப்பு- இன்று அன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த பதிவு இடப்படுகிறது.
மகாத்மா காந்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த வேளைகளில் ஒருபோதும் அவர்கள் அவரின் உண்ணாவிரதத்தை குழப்பியது கிடையாது.
ஆனால் மகாத்மாவின் அகிம்சையை மதிப்பதாக கூறும் இந்திய அரசு தனக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அன்னை பூபதிக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தினார்கள்.
உண்ணாவிரதம் இருந்து மடிந்த திலீபன் ஒரு புலிப் போராளி என்றும் அதனால்தான் அவருடைய அகிம்சைப் போராட்டத்திற்கு இந்திய அரசு மதிப்பு அளிக்கவில்லை என்றும் சிலர் இந்திய அரசுக்கு ஆதரவாக நியாயம் கூறுகிறார்கள்.
அவர்களிடம் நாம் கேட்க விரும்புவது என்னவெனில், அப்படியென்றால் மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து மடிந்த 56 வயது அன்னை பூபதியின் அகிம்சை போராட்டத்தை ஏன் இந்திய அரசு மதிக்கவில்லை?
அவருடைய உண்ணாவிரத போராட்டத்தை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை , எதற்காக அவருடைய கணவரை, பிள்ளைகளை எல்லாம் கைது செய்து அவரை அச்சுறுத்த வேண்டும்?
ஆங்கிலேயர்கள் தங்களை காந்திதேசம் என்றோ அல்லது அகிம்சையை மதிப்பவர்கள் என்றோ ஒருபோதும் கூறியதில்லை. ஆனாலும் அவர்கள் காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது அவருடைய மனைவியையோ அல்லது பிள்ளைகளையோ கைது செய்து அச்சுறுத்தவில்லையே.
தன்னை காந்தி தேசம் என்றும் அகிம்சையை மதிக்கும் நாடு என்றும் கூறிக்கொள்ளும் இந்தியா உண்ணாவிரதம் இருந்த அன்னை பூபதியை கொன்றது மட்டுமன்றி அவருடைய போராட்டத்தை குழப்பவும் அல்லவா முயற்சி செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள பலருக்கும் யாழப்பாணத்தில் உண்ணாவிரதம் இருந்து இறந்த திலீபனை மட்டுமே தெரிந்திருக்கிறது. அதற்கு பின்னர் மட்டக்களப்பில் 10 பிள்ளைகளின் தாயான 56 வயது அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து இறந்த விடயம் பலருக்கு தெரியவில்லை.
போர் நிறுத்தம் கோரி 19.03.1988ல் உண்ணாவிரதம் ஆரம்பித்த அன்னை பூபதி சரியாக ஒரு மாதம் கழித்து 19.04.1988 யன்று மரணமடைந்தார்.
இங்கு வேடிக்கை என்னவெனில் உண்ணாவிரதம் இருந்த அன்னை பூபதியை காப்பாற்ற முயற்சி செய்யாமல் அவரைக் கொன்ற இந்திய அரசு தற்போது வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் 20 காந்தி சிலைகளை நிறுவ முயற்சி செய்கிறது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவமோகன் என்பவருக்கு கொஞ்சமேனும் அரசியல் அறிவு இருக்குமாயின் அன்னை பூபதியை கொன்றுவிட்டு இப்போது காந்தி சிசைகளை நிறுவ உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்று இந்திய அரசிடம் கேட்டிருக்க வேண்டும்.
அனால் இந்த சிவமோகன் எம்.பியோ அவ்வாறு இந்திய அரசைக் கேட்பதற்கு மாறாக முல்லைதீவில் காந்தி சிலைகளை உடைத்தார்கள் என்று சில தமிழ் இளைஞர்களை பொலிசாரிடம் காட்டிக் கொடுத்திருக்கிறார்.
அன்னை பூபதியின் ஆவி இந்திய அரசை மன்னிக்காவிட்டாலும் இந்த அரைகுறை சிவமோகன் எம்.பியையாவது மன்னிக்கட்டும்.

No comments:

Post a Comment