Sunday, April 30, 2017

•என்ன மயிருக்கடா காந்தி சிலை வைக்கிறீர்கள்?

•என்ன மயிருக்கடா காந்தி சிலை வைக்கிறீர்கள்?
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 60 நாளாக அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கேப்பாப்பிலவு மக்கள் தமது சொந்த நிலங்களை ஒப்படைக்குமாறு கோரி 51வது நாளாக அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கிளிநொச்சியில் பன்னங்கட்டி மக்கள் 34 நாட்களாக அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருக்கிருக்கிறார்கள்.
முள்ளிக்குளத்தில் கடற்படை வசம் இருக்கும் தமது சொந்த நிலங்களை ஒப்படைக்குமாறு கோரி மக்கள் 31 நாட்களாக அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் மட்டுமன்றி மறிசுக்கட்டியில் முஸ்லிம் மக்கள் 27 நாட்களாக அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் யாழ்ப்பாணத்தில் 45 நாட்களாகவும், மட்டக்களப்பில் 51 நாட்களாகவும் திருகோணமலையில் 42 நாட்களாகவும் அம்பாறையில் 45 நாட்களாகவும் அகிம்சை வழியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இலங்கையில் தமிழ் மக்கள் நடத்தும் அகிம்சைப் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டன், கனடா, பிரானஸ்; வாழ் தமிழர்களும் அகிம்சை வழியில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்..
ஆனால் இலங்கை அரசோ அல்லது வேறு எந்த நாட்டு அரசோ மக்களின் அகிம்சை போராட்டத்திற்கு எந்த மதிப்பும் வழங்கவில்லை.
நல்லாட்சி அரசுடன் நல்லிணக்கமாக செயற்படுவதாக கூறிய சுமந்திரன் ராணுவத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தை அண்டிய 4000 ஏக்கர் காணியை விடுவிக்க முடியாது என்று ராணுவம் சுமந்திரனிடம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி காணாமல்போனோருக்கான அலுவலகம் அமைப்பதற்கும் ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடியதால்தான் இலங்கை அரசு தீர்வு தரவில்லை என்று சிலர் புத்தகம் எழுதினார்கள்.
இப்போது மக்கள் அகிம்சை வழியில் போராடும்போது இலங்கை அரசு ஏன் கண்டு கொள்ளவில்லை என்பதற்கு அவர்கள் இன்னொரு புத்தகம் எழுதுவார்களா?
மக்களின் அகிம்சைப் போராட்டத்தை இலங்கை அரசு மதிக்கவில்லை. ஆனால் சிலர் அகிம்சையை போதித்த காந்தி சிலையை நிறுவுகிறார்கள்.
இந்தியாவில் டில்லியில் தமிழக விவசாயிகள் 30 நாட்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராடுகிறார்கள்.
அவர்கள்,
எலி சாப்பிட்டு போராடினார்கள்
மண் சோறு சாப்பிட்டு போராடினார்கள்
தமக்கு சாட்டையால் அடித்து போராடினார்கள்.
கோமணத்துடன் நின்று போராடினார்கள்.
முழு நிர்வாணமாக நின்று போராடினார்கள்.
இறுதியாக மூத்திரம் குடித்தும் போரடியுள்ளார்கள்.
ஆனால் நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் மோடியால் விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியவில்லை.
காந்தி பிறந்த தேசத்திலேயே அவரது அகிம்சை வழிப் போராட்டத்தை பிரதமர் மோடியால் மதிக்கப்படவில்லை.
அப்புறம் என்ன மயிருக்கடா ஈழத்தில் காந்தி சிலையை நிறுவுகிறீர்கள்?

No comments:

Post a Comment