Sunday, April 30, 2017

•ஜெயதேவன் ஊருக்கு உபதேசம் செய்ய முன்னர் தான் முன்மாதிரியாக நடந்து காட்டுவாரா?

•ஜெயதேவன் ஊருக்கு உபதேசம் செய்ய முன்னர்
தான் முன்மாதிரியாக நடந்து காட்டுவாரா?
லண்டனில் நடைபெற்ற தந்தை செல்வா நினைவு தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜெயதேவன் “ புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொருவரும் நிதி சேகரித்து நாட்டிற்கு அனுப்பி உதவ வேண்டும”; எனக் கேட்டுள்ளார்.
முன்பு புலிகளுக்காக வீடு வீடாக சென்று பணம் சேகரித்தவர்கள் மீண்டும் அவ்வாறு பணம் சேகரித்து அனுப்ப முன்வரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அவர் கூறிய கருத்து நல்ல கருத்துதான். நாட்டில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கப் போவதில்லை.
புலம் பெயர் தமிழர்கள் இதுவரை நிறைய உதவியிருக்கிறார்கள். இன்னும் உதவிக் கொண்டேதான் இருப்பார்கள்.
புலம்பெயர் தமிழர்களின் உதவிதான் தாயகத்தில் உள்ளவர்களை மீண்டும் எழுந்து நிற்க பெரிதும் உதவியிருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.
ஆனால் இங்கு எமது கருத்து என்னவெனில் இவ்வாறு உதவ வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் செய்யும் ஜெயதேவன் முதலில் தான் அப்படி நடந்து கொள்வாரா என்பதே.
ஏனெனில் ஜெயதேவன் முன்னர் லண்டன் புலிகளின் பொறுப்பாளராக இருந்தபோது மக்கள் பணத்தில் உருவாக்கிய லண்டன் கோயில் ஒன்றை தனது சொத்தாக்கியுள்ளார்.
புலிகளுடன் ஜெயதேவனுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். அதன் நியாயம் அநியாயம் குறித்து நாம் இங்கு பேச வரவில்லை.
எமது கோரிக்கை எல்லாம் மக்கள் பணத்தில் உருவாக்கிய அந்த கோயில் மீண்டும் மக்கள் சொத்தாக மாற்றப்பட வேண்டும்.
அதில் வரும் வருமானத்திற்குரிய கணக்கை பொதுவில் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
அதில் கிடைக்கும் வருமானம் முழுவதும் மக்களுக்கே செலவு செய்ய வேண்டும். தேவையானால் ஜெயதேவன் குறிப்பிடுகின்ற மாதிரி அந்த பணம் மழுவதும் தாயகத்தில் உள்ள மக்களுக்கு செலவு செயயலாம்.
இதனை செய்ய ஜெயதேவன் முன்வருவாரா? அல்லது ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி கதைதானா?

No comments:

Post a Comment