Thursday, January 30, 2020

• இந்திய உளவு (பாகம்-4)

• இந்திய உளவு (பாகம்-4) குறிப்பு - எனது இந்திய உளவு பதிவு முகநூல் சமூக விதிகளுக்கு எதிராக இருப்பதாக கூறி அப் பதிவை நீக்கியதோடு எனக்கு ஒரு மாத தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் நான் கேட்டுக்கொண்டபடி மறுஆய்வு செய்து தவறுக்கு வருந்துகிறோம் எனக்கூறி பதிவு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போடப்பட்ட ஒரு மாத தடை நீக்கப்படவில்லை. ( tholar balan ) 1995ம் ஆண்டு நான் துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தவேளை அப்போது திருச்சி கியூ பிரிவு டிஎஸ்பி சண்முகம் அவர்கள் ஒருமுறை முகாமை பார்வையிட வந்திருந்தார். இவர் லஞ்சம் வாங்காத ஒரு நேர்மையான அதிகாரி என்று சக அதிகாரிகளால் மதிக்கப்படுபவர். அப்போது அவர் தன் பர்சில் இருந்த பிரபாகரன் படத்தைக் காட்டி தானும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவன் என்று எம்மிடம் பேசும்போது கூறினார். இவர் திராவிட கழக ஆதரவாளர். எனவே பிரபாகரன் படம் தன் பர்சில் வைத்திருந்தது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. ஆனால் எனக்கு ஆச்சரியம் என்னவெனில் இவர் எப்படி சுப்பிரமணியசுவாமி மீது பொய் வழக்கு போட்டார் என்பதே. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அவருக்கு எதிராக சுப்பிரமணியசுவாமி பல வழக்குகளை போட்டு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தார். அதனால் சுப்பிரமணியசுவாமி தன் வீட்டில் விடுதலைப்புலி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார் என அவர் மீது வழக்கு போட்டு அவரைக் கைது செய்ய முயற்சி செய்தது தமிழக பொலிஸ். தமிழக பொலிஸ் சார்பாக இந்த வழக்கை போட்டவர் இந்த டிஎஸ்பி சண்முகம் அவர்களே. எனவே அவரிடம் ஏன் அப்படி செய்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் வீரமணி ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக தன்னை இதில் மாட்டிவிட்டிட்டார். இது சரிவராது என்று அப்பவே நான் வீரமணியிடம் கூறினேன். ஆனால் அவர் பிடிவாதமாக நின்று வழக்கு போட வைத்துவிட்டார் என்றார். அப்போது வீரமணி ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்தார் ஜெயலலிதாவுக்கு “சமூகநீதி காத்த விராங்கனை” என்று பட்டம் கொடுத்திருந்தார். அவர் சுப்பரமணியசுவாமியை அடக்கி ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இந்த திட்டத்தை தீட்டியிருக்கிறார். அதற்காக ஒரு புலி உறுப்பினரை தான் சுப்பரமணியசுவாமி வீட்டில் தங்கியிருந்ததாக வாக்குமூலம் கொடுக்க வைத்திருக்கிறார். அந்த புலி உறுப்பினரின் வாக்குமூலத்தை வைத்து சுப்பிரமணியசுவாமியை கைது செய்து சிறையில் அடைப்பதே வீரமணியின் பிளானாக இருந்தது. ஆனால் சுப்பிரமணியசுவாமி அந்டத திட்டத்தை மறியடித்து கைதில் இருந்து தப்பிவிட்டார். வீரமணியின் திட்டத்தால் அநியாயமாக ஒரு பலி உறுப்பினர்தான் சிறையில் இருக்க வேண்டியதாகிவிட்டது. இங்கு இந்த விடயத்தை நான் நினைவூட்டுவதற்கு காரணம் இந்திய உளவு நிறுவனங்கள் எப்படி பொய் வழக்கு போடும் என்பதையும் அனைவரும் அறிய வேண்டும் என்பதே. அதுவும் வீரமணி போன்ற ஒரு தலைவரே உளவுப்படையின் செல்வாக்கை தமது அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்துவது வெட்கக்கேடானது. அதுமட்டுமல்ல வீரமணி தனது இந்த செல்வாக்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சைக்குகூட பயன்படுத்தவில்லை. (இன்னும் வரும்) Image may contain: 1 person, smiling, glasses Image may contain: 1 person, smiling, close-up

No comments:

Post a Comment