Thursday, January 30, 2020

•நாய்கள் நன்றி உள்ளவை.

•நாய்கள் நன்றி உள்ளவை. அவை எப்போதும் விசுவாசமாக வாலாட்டிக் கொண்டிருக்கும். கோத்தா - அண்ணே! இந்த விமல் மனுசி ரஞ்சனுடன் பேசிய ரெலிபோன் ஆடீயோ வந்து பிரச்சனையாக இருக்கு. இதை எப்படி சமாளிப்பது? மகிந்தா - இது ஒரு சின்னப் பிரச்சனை. விமலை மன்னார் போய் பலகையில் ஏன் தமிழ் முதலாவதாக எழுதியிருக்கு என்று பிரச்சனை பண்ணச்சொல்லு. எல்லார் கவனமும் அங்கு திரும்பிவிடும். அப்புறம் விமல் மனுசியின்ர பிரச்சனையை மறந்திடுவாங்கள். கோத்தா- அப்புறம் இந்த சம்பந்தர் எப்ப பார்த்தாலும் “சர்வதேசசம் கவனிக்கும்” என்று சொல்லுகிறார். உண்மையில் சர்வதேசம் ஏதும் கவனிக்குமோ என்று பயமாய் இருக்கு. மகிந்தா- ஹா ஹா ! அடேய் தம்பி, சர்வதேசம் கவனிக்கும் என்று சம்பந்தர் சொன்னால் அதன் அர்த்தம் தன்னைக் கவனிக்கும்படி கூறுகிறார். கோத்தா- புரியவில்லை. அவரை எப்படி கவனிப்பது? மகிந்தா- “சம்பந்தர் தனக்கு சொகுசு பங்களா வாங்கினார். ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் வாங்கவில்லை” என்று ஒரு அறிக்கையை விமலை விடச் சொல்லு. அப்புறம் பார் எல்லாம் தானாய் நடக்கும். கோத்தா - இப்படி அறிக்கை விட்டால் அவருக்கு கோபம் அல்லவா வரும்? அப்புறம் மனுசன் இந்தியன் எம்பசியில் போய் ஒப்பாரியல்லோ வைக்கும்? மகிந்தா- இல்லை. அவரால் சொகுசு பங்களா இல்லாமல் இருக்க முடியாது. எனவே பாராளுமன்றதில் வந்துதான் ஒப்பாரி வைப்பார். கோத்தா - பாராளுமன்றத்தில் ஒப்பாரி வைக்கும்போது என்ன செய்வது? மகிந்தா- சம்பந்தர் தொடர்ந்தும் சொகுசு பங்களா வசதிகளை அனுபவிக்கலாம் என்று அறிவித்துவிடு. கோத்தா - இதனால் எங்களுக்கு என்ன லாபம்? மகிந்தா - அவர் நன்றி மறக்காதவர். அவர் எப்போதும் எமக்கு விசுவாசமாக இருப்பார். கோத்தா- ஆனால் இம்முறை ஜ.நா வில் நாம் தப்ப முடியாது என்று சுமந்திரன் கூறுகின்றாரே? மகிந்தா - ஆம். அப்படியென்றால் தன்னையும் கவனியுங்கள் என்று அர்த்தம். கோத்தா - அவரை எப்படி கவனிப்பது? மகிந்தா - அவருடைய அதிரடிப்படை பாதுகாப்பை நீக்க மாட்டோம் என்று கூறு. அதுவும் போதவில்லை என்றால் போனஸாக நிதிக்குழு தலைவர் பதவியையும் கொடு. அப்பறம் பேசாமல் இருப்பார். கோத்தா - இந்தளவு சீப்(மலிவு)பானவர்களா இவர்கள்? மகிந்தா - சுறாமீன்களை வளர்த்த உனக்கு நாய்களை எப்படி வளைப்பது என்று தெரியவில்லை. நாய்களுக்கு இறைச்சித் துண்டுகளை வீசி எறிந்தால் அவை காலம் பூராவும் விசுவாசமாக வாலாட்டிக் கொண்டிருக்கும். குறிப்பு - சம்பந்தர் ஐயாவையும் சுமந்திரனையும் நாய்களுடன் ஒப்பிட்டு நாய்களை நான் கேவலப்படுத்திவிட்டதாக தயவு செய்து யாரும் என்மீது வருத்தம் கொள்ள வேண்டாம். Image may contain: 2 people, including ஃபாரூக் முகமது, people smiling, people sitting and indoor

No comments:

Post a Comment