Thursday, January 30, 2020

இந்திய உளவு (பாகம் - 6)

•இந்திய உளவு (பாகம் - 6) கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து ஒரு ஒலிப்பதிவு எனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அது சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஈழ அகதியை கியூ பிராஞ் அதிகாரி ஒருவர் மிரட்டும் ஒலிப்பதிவு ஆகும். குறித்த ஈழ அகதி இளைஞரை இலங்கை உளவுத்துறையினர் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோருவதாகவும் எனவே தாங்கள் அவரை பலவந்தமாக அனுப்பப்போவதாக அந்த கியூ பிராஞ் அதிகாரி கூறுகிறார். ஏற்கனவே இவ்வாறு பல அகதி இளைஞர்கள் இலங்கை அரசிடம் இரகசியமாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் சிறப்புமுகாமில் இருக்கும் ஒருவரை ஒப்படைக்கப்போவதாக கூறுவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகள் எவரையும் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இந்த உளவுத்துறையினர் சட்டத்தையோ அல்லது நீதிமன்ற உத்தரவுகளையோ ஒருபோதும் மதிப்பதும் இல்லை. பின்பற்றுவதும் இல்லை. 1991ல் நடந்த இவ்வாறான ஒரு சம்பவத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1991ல் ராஜீவ் கொலையை அடுத்து புலிகளிடம் பயிற்சி பெற்ற தமிழர் மீட்சிப்படையினர் என சுமார் 25 தமிழக இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது இரு இளைஞர்கள் தாங்கள் தேடப்படுவதை அறிந்து பாதுகாப்பிற்காக வன்னி சென்று புலிகளுடன் தங்க முடிவு செய்தனர். இவர்களை வன்னியில் இறக்கிவிடுவதாக கூறி தமது வள்ளத்தில் ஏற்றிச் சென்ற தமிழக மீனவர் மாறி நெடுந்தீவில் இறக்கி விட்டுள்ளார். நெடுந்தீவில் இருந்த ஈபிடிபி போராளிகளை புலிப் போராளிகள் என நினைத்த இந்த இரு இளைஞர்களும் தங்கள் உண்மை விபரத்தை கூறியிருக்கின்றனர். ஈபிடிபியினர் இவர்களை இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். கடற்படையினர் இராணுவ உளவுத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு விடுதலைக்காக போராடுவதை அறிந்ததும் இலங்கை ராணுவ உளவுத்துறையினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அதுமட்டுமல்ல இவர்களுடைய தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளையும் தாங்கள் தருவதாக உறுதியளித்துள்ளனர். ஏனெனில் அப்போது இலங்கை ஜனாதிபதியாக பிரேமதாசா இருந்தார். அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தார். ஆனால் தாம் தேடப்படும் இரு இளைஞர்கள் இலங்கை உளவுப்படையிடம் இருப்பதை இந்திய உளவுப்படை எப்படியோ அறிந்துவிட்டது. உடனே ஒரு மிரட்டல் கோல் இந்திய உளவுப்படையிடம் இருந்து சென்றது. அடுத்த வினாடி இலங்கை உளவுப்படை மறுபேச்சின்றி இந்த இரு இளைஞர்களையும் ஒப்படைத்து விட்டது. இங்கு ஆச்சரியம் என்னவெனில் இலங்கை சென்று தனி விமானத்தில் பிடித்து வந்த இந்த இரு இளைஞர்களையும் திருச்சி பஸ் நிலையத்தில் தாம் கைது செய்ததாக இந்திய உளவுப்படை கூறியதுதான். ( தொடரும்) Image may contain: 1 person, close-up Image may contain: 1 person, smiling, close-up

No comments:

Post a Comment