Thursday, January 30, 2020

தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார்களே

தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார்களே ஆனால் இவர்களுக்கு மட்டும் விடுதலை கிடைக்குதில்லையே? தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார்கள். எத்தனையோ தை பிறந்துவிட்டது. சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு மட்டும் வழி பிறக்கவும் இல்லை. விடுதலை கிடைக்கவும் இல்லை. இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்போர் முதலில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கட்டும். தனது ஆட்சியை தக்க வைப்பதற்காக இச் சிறப்புமுகாம் கலைஞர் கருணாநிதியால் 1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அவர் சாதாரண முகாம்களில் தங்கியிருந்த அப்பாவி அகதி இளைஞர்களை சிறப்புமுகாமில் அடைத்து பயங்கரவாதிகள் என்று கணக்கு காட்டினார். சிறப்புமுகாமை ஆரம்பித்து வைத்த அந்த கலைஞர் கருணாநிதியும் இறந்து விட்டார். ஆனால் அவரால் ஆரம்பிக்கப்பட்ட இக் கொடிய சித்திரவதைமுகாம் இன்னும் மூடப்படவில்லை. தனது தந்தை ஆரம்பித்து வைத்த சிறப்புமுகாமை மூடுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை கோரவில்லை. அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படியும் அவர் கேட்கவில்லை. ஆனால் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறாராம். நம்பிட்டோம்? அண்மையில் இச் சிறப்புமகாமில் 21 அகதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி தற்கொலைக்கு முயன்றார்கள். ஆனால் அப்போதுகூட இந்திய அரசு அவர்கள் மீது இரக்கம் காட்டவில்லை. பாகிஸ்தான் பங்களாதேஸ் இந்து அகதிகளுக்கு இரக்கம் காட்டும் மோடி அரசு ஈழ இந்து அகதிகளுக்கு இரக்கம் காட்ட மறுக்கிறது. ஏனெனில் அவர்கள் தமிழர்கள் என்பதாலா? அண்மையில் தலைவர் சம்பந்தர் ஐயா தனது மருத்தவ சிகிச்சைக்காக டில்லி வந்திருந்தார். அப்போதுகூட அவரால் இந்த சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யும்படி இந்திய அரசிடம் ஏனோ கோர முடியவில்லை. ஆனால் இலங்கை திரும்பி வந்து கொஞ்சம்கூட கூச்சமின்றி இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று அவர் அறிக்கை விடுகிறார். இலங்கையில் சிறையில் இருக்கும் கைதிகளின் விடுதலைக்கே குரல் கொடுக்காதவர் இந்தியாவில் சிறப்புமுகாமில் இருக்கும் அகதிகளுக்கு குரல் கொடுப்பாரா என்ன? Image may contain: 1 person, possible text that says 'இது சிறப்பு முகாமா ? அல்லது சித்ரவதை முகாமா'

No comments:

Post a Comment