Thursday, January 30, 2020

•சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கம் பங்கு மறைக்கப்படுகிறதா? அல்லது மறக்கபடுகிறதா?

•சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கம் பங்கு மறைக்கப்படுகிறதா? அல்லது மறக்கபடுகிறதா? இன்று (2.1.1982) தோழர் சுந்தரம் கொல்லப்பட்ட நாள். பட்டப்பகலில் மக்கள் மத்தியில் நடந்த முதலாவது சகோதரப் படுகொலை நாள். "புதியபாதை" சுந்தரம் யாழ் வெலிங்டன் தியேட்டருக்கு முன்னால் சித்திரா அச்சகம் அருகில் கொல்லப்பட்ட நாள். இன்று முகநூலில் சிலர் அவரை நினைவு கூர்ந்துள்ளனர். சுந்தரம் நினைவு கூரப்படவேண்டிய ஒரு போராளிதான். ஆனால் புலிகளால் சுந்தரம் கொல்லப்பட்டார் என்றே அனைவரும் குறிப்பிட்டுள்ளனரேயொழிய யாரும் சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கத்தின் பங்கை குறிப்பிட வில்லை. இது சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கத்தின் பங்கு மறைக்கப்படுகிறதா அல்லது மறக்கபடுகிறதா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது. புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியவர்கள் வேறு இயக்கத்தில் சேர்ந்து இயங்கக் கூடாது. அவ்வாறு இயங்கினால் அது மரண தண்டனை குற்றமாகும் என்ற புலிகளின் அமைப்பு விதிக்கு அமைய சுந்தரம் கொல்லப்பட்டார் என்றே அன்று புலிகள் கூறினார்கள். புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பலர் இருக்கும்போது சுந்தரம் மட்டும்; எதற்காக குறி வைக்கப்பட்டார்? அதுவும் பட்டப்பகலில் மக்கள மத்தியில் வைத்து ஏன் கொலை செய்யப்பட்டார்? இந்த சகோதர படுகொலையை தமிழர்விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கம் நினைத்திருந்தால் தலையிட்டுத் தடுத்திருக்கலாம். உண்மை என்னவெனில் இந்த சுந்தரம் படுகொலையின் சூத்திரகாரியே அந்த தலைவர் அமிர்தலிங்கம்தான் துரையப்பா, கனகரட்ணம் போன்றவர்களை துரோகி என்று முத்திரை குத்தி இளைஞர்களால் சுட வைத்தவரும் அமிர்தலிங்கமே. அதுபோல் "புதியபாதை" பத்திரிகையில் தன்னை தொடர்ந்து அம்பலப்படுத்தி எழுதிய சுந்தரத்தையும் கொல்ல வைத்தவர் அமிர்தலிங்கமே. இந்த உண்மை அன்று போராளிகள் மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்தது. சுந்தரத்தின் படுகொலையை கண்டித்து நாகராஜா(வாத்தி) பத்மநாபா, விசுவானந்ததேவன், "டெலா" ஒபராய் தேவன் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து பிரசுரம் வெளியிட்டிருந்தார்கள். அந்த பிரசுரத்திலும் இந்த உண்மை கூறப்பட்டீருக்கிறது . இன்று சம்பந்தர் அய்யா ஆயுதம் ஏந்திப் போராடிய இளைஞர்களை பயங்கரவாதிகள் என்கிறார். ஆனால் துரோகி ஒழிப்பை ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்களே என்ற உண்மையை வரலாற்றில் இனி ஒருபோதும் மறைக்க முடியாது. Image may contain: 1 person, flower

No comments:

Post a Comment