Thursday, January 30, 2020

வரலாறு மாறுகிறதா?

வரலாறு மாறுகிறதா? இந்தியாவில் எந்த மாநிலத்திலும் போய் இருந்துகொண்டு அந்த மாநிலத்திற்கு எதிராக பேசிவிட முடியாது. பேசினால் உடனே உதைத்து அனுப்பி விடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் வந்து உட்கார்ந்துகொண்டு தமிழ் இனத்திற்கு எதிராக தாராளமாக பேசலாம். கைபர் கணவாய் ஊடாக வந்து உட்காந்த கூட்டத்தைச் சேர்ந்த துக்ளக் சோ பேசிக் கொண்டிருந்தார். இப்போது துக்ளக் குருமூhத்தி தமிழ் இனத்திற்கு எதிராக பேசுகிறார். ஆனால் தமிழ் இனம் இதற்கு எதிராக மூச்சுகூட விட முடியாது. தலை குனிந்து கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் வழக்கம். இதுதான் வரலாறு என்கிறார்கள். எட்டுக்கோடி தமிழரும் வழக்கம்போல் தலை குனிந்து இருக்கும்போது எட்டுப் பேர் மட்டும் எப்படி அப்படி இருக்க முடியாது என்கிறார்கள்? இவர்கள் ஏன் அடிமையாக வீழ்ந்து கிடக்க மறுக்கிறார்கள்? அல்லது இவர்கள் ஏன் வரலாற்றை மாற்ற முயல்கிறார்கள்? ஒருவேளை இந்த எட்டுப் பேரும் சோற்றில உப்பு போட்டுச் சாப்பிடுகிறார்களா? அதனால்தான் அவர்களுக்கு உணர்வு வந்து விட்டதா? சரி. ஒரு எட்டுப் பேருக்காவது கொஞ்சமாவது உணர்ச்சி வந்துள்ளதே என்றுதானே ஒரு தலைவர் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஆனால் “அத்து மீறு , அடங்க மறு, திருப்பி அடி “ என்று வரிக்குவரி கூறும் ஒரு தலைவர் அல்லவா முதன் முதலாக இவர்களை கண்டித்துள்ளார். என்னே கொடுமை இது? Image may contain: 6 people, including சீலன் பிரபாகரன், people sitting 58You, தமிழரசன் சீனிவாசன், Thiru Jegatheesan and 55 others 10 comments

No comments:

Post a Comment