Thursday, January 30, 2020

•வடலி வளர்த்து கள்ளுக் குடிக்க நினைக்கும் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!

•வடலி வளர்த்து கள்ளுக் குடிக்க நினைக்கும் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்! விக்கினேஸ்வரன் அவர்களும் ஆன்மீகவாதி. நடிகர் ரஜனியும் ஆன்மீகவாதி. அதனால் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள் என்கிறார்கள். சரி. அப்படியென்றால் இதுவரை சந்திக்காதவர்கள் இப்போது மட்டும் எதற்காக சந்தித்துக்கொண்டார்கள்? 3000 ஈழ அகதிகளை இந்திய அரசு இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது. அதைத் தடுத்து நிறுத்த சந்தித்தார்களா? இல்லை. அப்படியென்றால், தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதற்காக சந்தித்தார்களா? இல்லை. அப்படியென்றால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்காக சந்தித்தார்களா? இல்லை. அப்படியென்றால் தினமும் கேரளாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படும் கஞ்சாவை தடுத்து நிறுத்த சந்தித்தார்களா? இல்லை. அப்புறம் எதற்காகத்தான் சந்தித்தார்கள்? ஒருவேளை எதிர்காலத்தில் நடிகர் ரஜனி பாஜக சார்பில் தமிழக முதலமைச்சரானால் அப்போது அவர் மூலம் இந்திய மத்திய அரசிடம் உதவி கோருவதற்கான சந்திப்பு என்கிறார்கள். ஓ! அதாவது, வடலி வளர்த்து கள்ளுக்குடிக்க நினைக்கிறார் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் என்கிறார்கள். ஆனால் வடலி வளர்த்து கள்ளுக் குடிப்பதுகூட சிலவேளை சாத்தியமாகலாம். ஆனால் நடிகர் ரஜனி தமிழக முதலமைச்சராவது என்பது ஒருபோதும் நடக்கப்போவதில்லை. ஒருவேளை அதிசயமாக அவர் முதலமைசரானாலும்கூட ஈழத் தமிழர் நலனுக்காக அவர் எதையுமே செய்ய மாட்டார் என்பது உறுதி. சூரியா ஒரு நடிகர். அவர் தனது உழைப்பில் இதுவரை 3600 மாணவர்களுக்கு கல்வி பெற உதவி செய்திருக்கிறார். இதில் பல ஈழ அகதி மாணவர்களும் அடங்குவர். ரஜனியும் ஒரு நடிகர். இதுவரை ஒரு ஈழ அகதிக்கூட எந்த உதவியும் செய்யாதவர். தனது பாடசாலையின் வாடகையைக்கூட கட்டாதவர். அப்படிப்பட்ட ரஜனி முதலமைச்சரானால் ஈழத் தமிழருக்கு உதவி செய்வார் என்று விக்கினேஸ்வரன் எப்படி எதிர்பார்க்கிறார்? Image may contain: 2 people, people smiling, people sitting

No comments:

Post a Comment