Thursday, January 30, 2020

•செய்தி - தமிழர்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச அதிகாரமே இந்தியாவின் தென்கோடியைப் பாதுகாக்கும் - முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

•செய்தி - தமிழர்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச அதிகாரமே இந்தியாவின் தென்கோடியைப் பாதுகாக்கும் - முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இக் கருத்தை விக்னேஸ்வரன் மட்டுமன்றி மு.திருநாவுக்கரசு . காசிஅனந்தன் போன்றவர்களும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். அதாவது இவர்களுக்கு தெரிந்த இந்த உண்மை இந்திய அரசுக்கு தெரியவில்லை என்று கருதுகிறார்கள். தாங்கள் இந்திய அரசைவிட புத்திசாலிகள் என நினைக்கிறார்கள் போலும். உண்மையில், ஈழத் தமிழர்கள் அதிளவு அதிகாரத்தை பெறுவது தமிழக தமிழர்களுக்கு உந்துதலைக்கொடுக்கும். அதனால் தமிழகம் இந்தியாவில் இருந்து பிரிந்துவிடும் என்று அஞ்சியே ஈழத் தமிழர்கள் அதிகாரங்கள் பெறுவதை இந்திய அரசு தடுத்து வருகிறது. அதுமட்டுமன்றி என்றைக்கு முழு இலங்கையையும் தன்னால் ஆக்கிரமிக்க முடியாத நிலை இந்திய அரசுக்கு வருகிறதோ அன்றுதான் ஈழத் தமிழருக்கு இந்திய அரசு உதவ முன்வரும். ஆனால் இன்று முழு இலங்கையையும் ஆக்கிரமிக்க இலங்கை அரசுகள் தொடர்ந்து இந்திய அரசை அனுமதிக்கின்றன. எனவே இந்நிலையில் இந்திய அரசு எப்படி ஈழத் தமிழருக்கு ஆதரவு தர முன்வரும்? இவர்கள் கூறுவதுபோல் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவ வேண்டுமாயின் இரண்டு விடயங்கள் நிகழ வேண்டும். முதலாவது, இலங்கை அரசு இந்திய ஆக்கிரமிப்பை நிராகரித்து சீன ஆக்கிரமிப்புக்கு வழி விடுமாயின் அப்போது இந்திய அரசு ஈழத் தமிழர்களை ஆதரிக்க முன்வரும். ஆனால் இலங்கை அரசு இந்திய அரசின் அனுமதியோடு ஓரளவு சீன ஆக்கிரமிப்பை அனுமதிக்குமேயொழிய இந்திய ஆக்கிரமிப்பை நிராகரிக்கும் நிலை இப்போது இல்லை. இரண்டாவது, தமிழக அரசும் தமிழக தலைவர்களும் வற்புறுத்தினால் இந்திய அரசு தவிர்க்க முடியாமல் ஈழத் தமிழர்களை ஆதரிக்க வேண்டிய நிலை வரலாம். ஆனால் அதற்கும் சாத்தியம் இல்லை. ஏனெனில் கனிமொழி உட்பட பல தமிழக தலைவர்கள் கொழும்பில் பல வியாபார நலன்களைப் பேணி வருகிறார்கள். எனவே அவர்கள் ஒருபோதும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய அரசு தலையிட வேண்டும் எனக் கோரப் போவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இவர்கள் இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளின் நலன்கள் குறித்தே கவலை கொள்ளவில்லை. அக்கறை காட்டவில்லை. அப்படிப்பட்டவர்கள் ஈழத்தில் தமிழருக்கு உதவுவார்கள் என்று எப்படி இந்த புத்திசாலிகள் எதிர் பார்க்கிறார்கள்? Image may contain: 1 person, standing and text

No comments:

Post a Comment