Thursday, January 30, 2020

அன்புள்ள அம்மாவுக்கு அனுப்பப்படாத கடிதங்கள்!

•அன்புள்ள அம்மாவுக்கு அனுப்பப்படாத கடிதங்கள்! கடந்த வருடம் இதே நாளில் என் தாயாரை இழந்தேன். இன்று அவரது முதலாவது நினைவு தினம் ஆகும். அவர் உயிருடன் இருந்தபோது என்னிடம் கேட்ட ஒரே ஒரு உதவி நான் எங்கிருந்தாலும் தனக்கு ஒரு கடிதம் போட வேண்டும் என்பதே. ஏன் என்று கேட்டதற்கு தான் ஒவ்வொருநாளும் சாப்பிடும்போது என்னை நினைப்பதாகவும் என் கடிதம் கண்டால்தான்; தன்னால் நிம்மதியாக சாப்பிட முடியும் என்றார். அதனால் நானும் எங்கிருந்தாலும் அவருக்கு தவறாமல் கடிதம் எழுதி வந்தேன். நான் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டபோதும் கடிதம் எழுதி சிறை அதிகாரிகளிடம் அனுப்புமாறு கொடுத்தேன். ஆனால் அந்த இரக்கமற்ற சிறை அதிகாரிகள் எனது அம்மாவுக்கான கடிதம் ஒன்றைக்கூட அனுப்பவில்லை. அன்புள்ள அம்மாவுக்கு என்று நான் எழுதியதை அவர்கள் (பொட்டு) அம்மானுக்கு எழுதிய கடிதம் என்று நினைத்து விட்டார்கள். எனவேதான் எனது எட்டு வருட சிறை வாழ்வு பற்றி நான் எழுதும் நூலுக்கு “அன்புள்ள அம்மாவுக்கு - அனுப்பப்படாத கடிதங்கள்” என்று தலைப்பு வைத்துள்ளேன். என் தயாரின் நினைவாக இந்த வருடம் எப்படியும் இந்த நூலை எழுதி முடித்துவிடுவேன் என நம்புகிறேன். குறிப்பு - தங்கள் பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ளும்படி பலர் எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வழக்கத்தைவிட இம்முறை அதிகளவில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறுவது மகிழ்ச்சி தருகிறது. என்னால் கலந்துகொள்ள முடியவில்லை எனினும் நிகழ்வுகள் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment