Thursday, January 30, 2020

•கோத்தபாயா தப்பித்துவிட முடியாது!

•கோத்தபாயா தப்பித்துவிட முடியாது! காணாமல் போனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டு விட்டார் புதிய ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ச அவர்கள்? ஆம். அவர்கள் யாவரும் இறந்துவிட்டார்கள் என்று சிம்பிளாக ஒரு அறிக்கை மூலம் தீர்க்க முயன்றுள்ளார். அவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்றால் எப்படி இறந்தார்கள் என்பதை தெரிவிக்க வேண்டிய கடமை ஜனாதிபதிக்கு உண்டு. ஏனெனில் இவர்கள் போரின் போது இறக்கவில்லை. போர் முடிந்த பின்பு ராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டவர்கள். இவர்கள் ராணுவத்தின் கையில் இருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் இதற்கு சாட்சிகளாக இருக்கின்றன. எனவே இவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது பற்றி முழு விபரம் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு ராணுவத்திற்கும் அதன் அரசுக்கும் உண்டு. இறந்தவர்கள் ஒன்றோ இரண்டோ இல்லை. மொத்தமாக இருபதாயிரத்திற்கு மேல் என்கிறார்கள். எனவே இத்தனை பேரும் யாரோ சில ராணுவ வீரர்களால் கொல்லப்பட்டிருக்க முடியாது. நிச்சயமாக இது அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்களால் உத்தரவிடப்பட்டு நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும். எனவே இந்த இனப்படுகொலை குறித்து முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர் அன்று ராணுவத்திற்கு பொறுப்பாhக இருந்த கோத்தபாயா ராஜபக்ச அவர்களே. விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய அந்த கோத்பாய ராஜபக்சவே இப்போது அனைவரும் இறந்து விட்டனர் என்று சர்வ சாதாரணமாக கூறுகிறார். இது குறித்து இந் நேரம் தமிழ் தலைவர்கள் பொங்கி எழுந்திருக்க வேண்டும் அல்லவா? ஆம். சம்பந்தர் ஐயா பொங்கி எழுந்தார். ஆனால் அவர் பொங்கி எழுந்தது இனப் படுகொலைக்காக அல்ல. மாறாக தனது சொகுசு பங்களாவுக்காக 60 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது அவருக்கு முக்கியமாக தெரியவில்லை. மாறாக தினமும் 60 படிகள் எறி இறங்குவதே அவருக்கு பெரும் கஸ்டம் தருகிறதாம். அதுமட்டுமல்ல அரசு தந்த பென்ஸ் சொகுசு வாகனத்தை வெறும் 2000 மைல்கள் மட்டுமே ஓடி அரசுக்கு பெற்றோல் செலவை மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கிறாராம். சரி சுமந்திரனாவது பொங்கி எழுவார் என்று பார்த்தால் அவரும் அமைதியாகவே இருக்கிறார். ஏனென்று பார்த்தால் அவருக்கு ஏற்கனவே நிதிக்குழுத் தலைவர் பதவி பார்சல் செய்யப்பட்டு விட்டதாம். இப்படி பதவிக்காகவும் சொகுசு பங்களாவுக்காகவும் வீழ்ந்து கிடப்பவர்களே தமிழ் மக்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் கோத்தபாயா ராஜபக்சவால் கொஞ்சம் கூட அச்சமின்றி தைரியமாக அனைவரும் இறந்தவிட்டனர் என்று கூற முடிகிறது. தலைவர்களை விலைக்கு வாங்கினாலும் தங்களை வாங்க முடியாது என்பதை தமிழ் மக்கள் விரைவில் கோத்பாயாவுக்கு உணர வைப்பார்கள். No photo description available.

No comments:

Post a Comment