Saturday, February 27, 2021

இவர் யார் என்று தெரிகிறதா?

•இவர் யார் என்று தெரிகிறதா? இவர் தர்பார் நடித்த சிவாஜிராவ் கெய்வாட் (ரஜனி) இல்லை. இவர் இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி இன்று இவரது பிறந்த தினம் ஆகும். இவர் இத்தாலியின் பிசா நகரில் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பிறந்தார். 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இறந்தார். வானவியல் அறிஞர், இவர் வேதியியல் வல்லுநர், கணிதவியலாளர், தத்துவஞானி, கண்டுபிடிப்பாளர் என பன்முக ஆற்றல் பெற்றவர். தொலைநோக்கி, காம்பஸ், தெர்மாமீட்டர் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை. இயற்பியலின் தந்தை, நவீன அறிவியலின் தந்தை, நவீன வானியலின் தந்தை என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இன்று விஞ்ஞானிகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கிறது। அரசு மரியாதை செய்கிறது। அறிவியல் உலகத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்யும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கூடக் கிடைக்கிறது। 16-17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் நிலைமை இவ்வளவு இனிமையாக இல்லை. அவர்களது கண்டுபிடிப்புகள் மதநம்பிக்கைகளுக்கு விரோதமானதாகக் கருதப்பட்டால் கண்டு பிடிப்புகளை அவர்கள் வெளியிட முடியாது. மீறி வெளியிட்டால், அவர்களது உயிருக்கே கூட ஆபத்து காத்திருந்தது. இப்படிப்பட்ட சிக்கலை இந்த உலகம் கண்ட மாபெரும் விஞ்ஞானி கலிலியோ தன் வாழ்நாளில் சந்தித்தார். பல நூற்றாண்டுகளாக பூமி நடுவில் இருப்பதாகவும் சூரியன் உள்ளிட்ட மற்ற எல்லா கோள்களும் பூமியைச் சுற்றி வருவதாகவும் நம்பப்பட்டது. ஆனால், கலிலியோ, ஆய்வுகள் முதன்முறையாக சூரியனை நடுநாயகமாகக் கொண்டு பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருவதாக நிரூபித்தன. இது, கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி கலிலியோவை கிறிஸ்தவ தலைமையகம் தண்டித்தது. அவருடைய பல கருத்துக்களை திரும்பப் பெறும்படி வற்புறுத்தியது. சாகும்வரை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்தது. 1992-இல்-கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து-கலிலியோவைத் தண்டித்தது தவறு என போப்பாண்டவர் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரினார். அறிவியல் உண்மைகள் அவை வெளியிடப்படும் காலத்தில் ஏற்கப்படாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் ஏற்கப்படும் என்பதற்கு கலிலியோவின் வாழ்க்கை ஓர் உதாரணம். இங்கு வேதனை என்னவென்றால் கலிலியோ தன் உயிரைப் பணயம் வைத்து பூமியே சூரியனை சுற்றி வருகிறது என்ற உண்மையை உலகிற்கு கூறினார். ஆனால் நம்மவர்கள் இப்பவும் காலையில் சூரியன் உதிக்கிறது. மாலையில் மறைகிறது என்று எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment