Saturday, February 27, 2021

ராணுவ அணிவகுப்புடன் சுதந்திரதினம் கொண்டாடிக்கொண்ட

ராணுவ அணிவகுப்புடன் சுதந்திரதினம் கொண்டாடிக்கொண்டு கொரோனோவைக் காரணம் காட்டி தமிழ் மக்களின் பேரணியை தடுப்பது என்ன நியாயம் என்று கோத்தபாயாவைக் கேட்காதவர்கள், அமைதியான முறையில் அகிம்சை வழியில் தமிழ் மக்கள் பேரணி செல்வதை தடுப்பதற்காக ஒரு ஊடகவியலாளர் உட்பட 38 பேருக்கு தடை உத்தரவு பிறப்பித்தது என்ன நியாயம் என்று கோத்தபாயாவைக் கேட்காதவர்கள், கிளிநொச்சி நீதிமன்றம் சாவகச்சேரி நீதிமன்றம் பேரணியை அனுமதிக்கிறது. ஆனால் பருத்தித்துறை நீதிமன்றம், மல்லாகம் நீதிமன்றம் பேரணிக்கு தடை விதிக்கிறது. .இது என்ன நீதி என்று கோத்தபாயாவைக் கேட்காதவர்கள், யாழ்ப்பாணத்தானைப் பற்றி உணர்ந்துகொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் கேட்கிறார்கள். அதுவும் ஜோசப் பரராயசிங்கம், சந்திரநேரு போன்றவர்களை கொன்ற பிள்ளையான் கருணா கும்பலை ஆதரித்துக்கொண்டு யாழ்ப்பாணத்தான் சாணக்கியனை அவமதித்துவிட்டதாக புலம்புகிறார்கள். தமிழ் மக்கள் தாம் ஒன்றுபட்டு போராடுவது மட்டுமன்றி அடுத்த சந்ததிக்கும் போராட்டத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதுகூடப் புரியாமல் இவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். புலிகளை அழித்தால் வடக்கில் வசந்தம் வரும் என்றார்கள். கிழக்கில் உதயம் வரும் என்றார்கள். ஏன் இன்னும் வரவில்லை என்று மகிந்த ராஜபக்சாவிடம் இவர்களால் ஏன் கேட்க முடியவில்லை? புலிகள் குழந்தைப் போராளிகளை பயன்படுத்துகின்றனர் என்று ஜ.நா வரை சென்று நீலிக் கண்ணீர் வடித்தவர்கள் இன்று குழந்தைகள் போராட்டக் களத்திற்கு வர நேர்ந்தது குறித்து அக்கறை கொள்வார்களா?

No comments:

Post a Comment