Saturday, February 27, 2021

தலைவர்களால் மறக்கப்பட்ட சிறப்புமுகாம் அகதிகள்!

•தலைவர்களால் மறக்கப்பட்ட சிறப்புமுகாம் அகதிகள்! இந்தியாவில் தீபெத் உட்பட பல நாட்டு அகதிகள் இருக்கின்றனர். ஆனால் ஈழ அகதிகள் மட்டுமே சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமில் அடைக்கப்படுகின்றனர். 1990ல் கலைஞர் கருணாநிதி தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இச் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமை வேலூர் கோட்டையில் ஆரம்பித்தார். இப்போது அதனை ஆரம்பித்த கலைஞர் கருணாநிதிகூட இறந்துவிட்டார். ஆனால் அவரால் ஆரம்பிக்கப்பட்ட இச் சிறப்புமுகாம் இன்னும் திருச்சியில் இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் பல தமிழக தலைவர்கள் இச் சிறப்புமுகாம் மூடப்பட வேண்டும் என்றும் அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தனர். ஆனால் தற்போது அத் தலைவர்கள்கூட இது தொடர்பாக குரல் கொடுப்பதை கைவிட்டுள்ளனர். அல்லது மறந்துவிட்டனர் என்று கூறலாம். இதில் தமிழக தலைவர்களையும் பெரிதாக குறை கூறமுடியாது. ஏனெனில் குரல் கொடுக்க வேண்டிய ஈழத் தமிழ்தலைவர்கள்கூட குரல் கொடுப்பதில்லை. அண்மையில் நடத்தப்பட்ட பொத்துவில் இருந்து பொலிகண்டி பேரணியில்கூட இலங்கையில் சிறைவைக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கப்பட்டது. ஆனால் இச் சிறப்புமுகாம் அகதிகளின் விடுதலை தொடர்பாக குரல் எழுப்பப்படவில்லை. இலங்கை சிறையில் உள்ளவர்கள் மீது வழக்குகள் உண்டு. இருந்தும் அவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என கோரப்படுகிறது. ஆனால் எந்த வழக்கும் இன்றி சிறப்புமுகாமில் அகதிகள் அடைக்கப்பட்டுள்னர். அவர்களின் விடுதலைக்கு குரல் எழுப்ப இந்த தலைவர்கள் தயங்குகின்றனர். இந ;நிலையில் சிறப்புமுகாமில் அகதிகள் துன்புறுத்தப்படுவது தொடர்பாக தமிழர் கட்சி இன்று ஆராய்கிறது. அவர்கள் முயற்சியாவது இந்த அப்பாவி அகதிகளின் விடுதலைக்கு வழி சமைக்கட்டும்.

No comments:

Post a Comment