Wednesday, April 27, 2022

ஈழத் தமிழர்களால் மறக்க முடியாத நாள்

ஈழத் தமிழர்களால் மறக்க முடியாத நாள் (27.04.2009) கடற்கரையில் மனைவி மற்றும் துணைவி சகிதம் கலைஞர் 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த நாள். போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று அவர் அறிவித்த பின்னரே நாற்பதாயிரம் ஈழத் தமிழர் படுகொலை செய்யப்பட்டனர். மக்கள் தொடர்ந்தும் படுகொலை செய்யப்படுவது பற்றி கேட்டபோது மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார். தன்னை கடலில் தூக்கி எறிந்தால் கட்டுமரமாகி வந்து காப்பேன் என்றார் அந்த உலகத் தமிழின தலைவர். அவர் காப்பாற்ற வரவில்லை. மாறாக டில்லி சென்று தன் பிள்ளைகளுக்கு அமைச்சு பதவி பெற்றார். இது பற்றி கேட்டபோது சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் மரண ஓலம் கேட்டால் இன்னொரு வீட்டில் மங்கல ஒலி கேட்கும் என்றார்.

No comments:

Post a Comment