Monday, March 30, 2015

• மார்ச்-8 பெண்கள் தினத்தை முன்னிட்டு

• மார்ச்-8 பெண்கள் தினத்தை முன்னிட்டு
பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக்கொடுக்காத வரையிலும் பாட்டாளி வர்க்கம் முழு விடுதலை அடைய முடியாது- தோழர் லெனின்
காரைநகரில் கடற்படையால் பள்ளி சிறுமி கற்பழிப்பு. அந்த கடற்படைச் சிப்பாய்களை நீதிமன்றில் ஆஜர் செய்யவும்கூட இலங்கை அரசு மறுப்பு
நெடுங்கேணியில் தமிழ் சிறுமி இலங்கை ராணுவத்தால் கற்பழிப்பு. இன்னும் அதன் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
மன்னாரில் ராணுத்தால் தமிழ் பெண் கற்பழிப்பு. மன்னார் ஆயர் வலியுறுத்திக் கேட்டும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கனகராயன் குளத்தில் மாணவி ஒருவர் கூட்டாக கற்பழிக்கப்பட்டு மரணம். குற்றவாளிகளை தேடி கைது செய்ய வேண்டிய பொலிஸ் வழக்குகூட பதிவு செய்யாது முடி மறைக்க முயல்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பை பெற்றுக்கொடுக்க வேண்டிய எமது தமிழ் சமூகம்
கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? என பட்டிமன்றம் நடத்தி மகிழ்கிறது.
விபுசிகாவின் தாயாரை விடுதலை செய்யுமாறு குரல் கொடுக்க வேண்டிய எமது சமூகம்
விஜய் டிவி யில் சுப்பர் சிங்கர் ஜெய்சிகாவின் வெற்றிக்காகப் பாடுபடுகின்றது.
இந்த நிலை ஈழத்தில் தமிழ் பெண்களுக்கு மட்டுமல்ல
இந்தியாவிலும்கூட,
மணிப்பூர் பெண்கள் ராணுவத்தால் கற்பழிக்கப்படுகின்றனர்
காஸ்மீரில் முஸ்லிம் பெண்கள் தாக்கப்படுகின்றனர்.
சதீஸ்கரில் ஆதிவாசிப் பெண்கள் கொல்லப்படுகின்றனர்
இந்தியாவில் 30 நிமிடத்திற்கொரு கற்பழிப்பு நடப்பதாக
ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது.
உலகம் பூராவும் பெண்கள் நிலை இதுதான்.
வருடத்தில் ஒரு நாளை பெண்கள் தினமாக கொண்டாடுவதால்
பெண்களுக்கு எந்த விடிவும் கிட்டப்போவதில்லை.
பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான புரட்சி ஒன்றே
பெண்களுக்கு முழு விடுதலையைப் பெற்றுக்கொடுக்கும்.

No comments:

Post a Comment