Monday, March 30, 2015

• தியாகு அவர்களே!

• தியாகு அவர்களே!
ஆசான் காரல் மாக்ஸ் அவர்கள் 11 வருடம் எந்த வேலைக்கும் போகாமல் மூலதனம் குறித்த ஆராய்ச்சியில் மூழ்கினார். அப்போது அவரது குழந்தைகள் பசியால் வாடின. பட்டினியால் இறந்தன. அந்த குழந்தைகள் பிறந்தபோது பால் புட்டி வாங்க மட்டுமல்ல அவை இறந்தபோது சவப்பெட்டி வாங்கவும் அவரிடம் பணம் இருக்கவில்லை. அத்தனை வறுமையிலும் அவருடைய மனைவி ஜென்னி மனம் சலிக்கவில்லை. அவருக்கு எதிராக ரோட்டில் உட்காhந்து போராடவில்லை. அவர்கள் காதலில் ஒரு துளியும் குறையவில்லை. ஏனெனில் அதுதான உண்மையான காதலும் புரட்சிகர வாழ்வும்.
இன்னொரு ஆசான் லெனின் அவர்கள் ரஸ்சிய மக்களை மட்டுமல்ல தனது மனைவியையும் புரட்கர பணியில் பங்குபெற வைத்தார். அவருடைய மனைவி புரட்சகர அரசாங்கத்தில் பங்கு பற்றி சேவைகள் புரிந்தார். இதுவே புரட்சகர வாழ்வு என வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்டது.
மாபெரும் ஆசான் மாசேதுங் அவர்களுக்கு நாலு மனைவிகள். ஆனால் அவர் மனைவிகள் யாரும் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் கூறியதில்லை. யாரும் அவருக்கு எதிராக ரோட்டில் உட்கார்ந்து போராடியதில்லை. மாறாக அவர்கள் அனைவரும் மாசேதுங் அவர்களின் புரட்சிகர வாழ்வில் உறுதுணையாக இருந்தார்கள்.
புரட்சியை முன்னெடுத்த ஆசான்கள் யாவரும் புரட்சிகர வாழ்வுக்கு தமது குடும்ப வாழ்வையே உதாரணமாக தந்துள்ளார்கள். தமது குடும்ப உறுப்பினர்களை தவிர்த்துவிட்டு யாரும் புரட்சியை முன்னெடுக்கவில்லை. எனவே குடும்ப உறுப்பினர்களை வென்றெடுக்க முடியாத உங்களால் எப்படி மக்களை வென்றெடுக்க முடியும்?
எனவே தயவு செய்து புரட்சகர வாழ்வுக்கு செல்கிறேன் என்று சொல்லி ஓடீ ஒளியாதீர்கள். நேரிடையாக தாமரையை சந்தியுங்கள். ஏனெனில் தாமரை வீதியில் உட்கார்ந்து போராடுவதால் அசிங்கப்படுவது நீங்கள் மட்டுமல்ல தமிழ்தேசியம், புரட்சிகர வாழ்வு போன்ற சொற்களும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment