Monday, March 30, 2015

தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா?

• தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா?
• இந்திய அரசு தமிழர்களுக்கு ஆதரவு இல்லையா?
பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடு. ஆனால் அந்த நாடு இதுவரை ஒரு இந்திய மீனவரையும் சுட்டுக்கொன்றது கிடையாது.
இலங்கை இந்தியாவின் நட்பு நாடு . ஆனால் இலங்கை இதுவரை 700 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றுள்ளது.
தற்போது யுத்தம் இல்லை. ஆனால் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என மிரட்டியுள்ளார்.
இதனைக் கண்டிக்க வேண்டிய இந்திய பிரதமர் மோடியோ தான் யாழ்ப்பாணம் செல்வதாக டிவீட்டரில் செய்தி போட்டு மகிழ்கிறார்.
உலகில் மீனவர்களை அதுவும் தனது நட்பு நாட்டு மீனவரை கொல்லும் அதிசய நாடு இலங்கை ஒன்றே.
அதுமட்டுமல்ல தனது சொந்த மீனவனையே கொல்லும் ஒரு நாட்டின் படைக்கு பயிற்சி அளிக்கும் அதிசய நாடும் இந்தியா ஒன்றே.
இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையிலும் ஆட்சி மாற்றம் எற்பட்டுள்ளது. ஆனால் தமிழக மீனவன் சுட்டுக்கொல்லப்படுவதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
தமிழ்நாட்டு தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்கள் கொல்லப்படுவது குறித்து இந்திய அரசுக்கு கவலை இல்லையா?
இங்கு இரண்டு அரசாலும் எவ்வித கவலையும் இன்றி கொல்லப்படுவது பரிதாபத்துக்குரிய தமிழ் இனமே.
உலகமும் இது கவலைப்படுவதில்லை. ஏனெனில் தமிழ் இனம் ஒரு மனித இனம் என்று உலகமே கருதவில்லை போலும்
இறுதியாக ஒரு வேண்டுகோள்!
அய்யா மோடி அவர்களே,
நீங்கள் எமது பிரச்சனைகளை தீர்க்காவிட்டாலும் பரவாயில்லை. சம்பூரில் உங்கள் அனல் மின்சாரத்திற்காக வெளியேற்றப்பட்ட தமிழர்கள் அகதிகளாக பல வருடம் வாழ்கின்றனர். அவர்களை மீண்டும் அந்த மண்ணில் வாழ் வழி விடுங்கள். அதுபோதும்.

No comments:

Post a Comment