டாக்டர் தம்பிராஜா அவர்களின் “மனநோய்களும் மனக்கோளாறுகளும்”
இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் டாக்டர் தம்பிராஜா அவர்கள் எழுதிய “மனநோய்களும் மனக்கோளாறுகளும்” என்னும் நூல் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந் நூல் மனநோய் பற்றிய விழிப்புணர்வை தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஜய்யமில்லை.
இலங்கையில் நடந்து முடிந்த நீண்ட யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 30வீதமான தமிழ் மக்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு இந்த நூல் நிச்சயம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
முன்னேறிய நாடுகள் என கருதப்படும் ஜரோப்பிய நாடுகளில்கூட அரசாங்கம் மனநோய் பற்றி அதிக கவனம் எடுக்கிறது. அதற்காக அதிக பணம் ஒதுக்கிறது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இது குறித்து அரசு மட்டுமல்ல சமூக அக்கறை உள்ள அமைப்புகள்கூட கவனம் செலுத்தாமை துரதிருஸ்டவசமானது.
மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது உறவினர்கள்கூட கவனிப்பதில்லை. ஆனால் இந்த நூல் அவர்களை அரவணைத்து சிகிச்சை அளிக்க பெரிதும் வழிகாட்டுகின்றது.
மக்கள் மத்தியில் மனநோய்கள் மனக்கோளாறுகள் குறித்து பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
மக்களிடையே பரவலாக காணப்படும் மனக்கோளாறுகள் பற்றி, மனச்சோர்வு முதல் மதுப் பழக்கம்வரை, மறதிநோய் முதல் உளவியல்ரீதியான பாலியல் கோளாறுகள் வரை இந் நூல் விளக்குகின்றது.
எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இந் நூல் வழங்கும் தகவல்கள் வாசகர் மனதில் மனநோய் பற்றிய விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தும்.
தனது மருத்துவ அனுபவங்களினூடாக ஒரு அரிய நூலை தமிழில் எழுதி தமிழ் சமூகத்திற்கு பெரிதும் உதவி புரிந்த டாக்டர் தம்பிராசா அவர்களின் பணி நிச்சயம் பாராட்டுக்குரியது.
No comments:
Post a Comment