Monday, March 30, 2015

• மு.நித்தியானந்தன் அவர்களின் “கூலித் தமிழ்”

• மு.நித்தியானந்தன் அவர்களின் “கூலித் தமிழ்”
மு.நித்தியானந்தன் அவர்களினால் எழுதப்பட்டு கிரியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் நூல் “கூலித்தமிழ்” ஆகும்.
19ம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிகளுக்கு கூலிகளாக கொண்டு செல்லப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களின் மத்தியில் எழுந்த முதல் எழுத்து முயற்சிகளை இந்நூல் பதிவு செய்கிறது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் கூலிகள் என்றும் அவர்களது மொழி கூலித் தமிழ் என்றும் அழைக்கப்படலாயிற்று. அதன் வரலாற்றை மு.நித்தியானந்தன் அவர்கள் நீண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தொகுத்து வழங்கியுள்ளார்.
பதுளையை பிறப்பிடமாக கொண்ட மு.நித்தியானந்தன் அவர்கள் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளியலில் சிறப்பு பட்டம் பெற்றவர். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றிய போது ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
தான் சார்ந்த சமூகம் குறித்த இலக்கிய வரலாற்றை மிகவும் சிரத்தையுடன் தொகுத்து வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரின் பங்களிப்பு மகத்தானது. நிச்சயம் பாராட்டுக்குரியது.
நாம் இதுவரை
இசைத்தமிழ் அறிந்திருக்கிறோம்
இயல் தமிழ் அறிந்திருக்கிறோம்.
நாடக தமிழ் அறிந்திருக்கிறோம்.
கணணி தமிழ்கூட அறிந்திருக்கிறோம்.
ஆனால் கூலித்தமிழ் என்ன என்பதை அறியவில்லை.
அதனை மு. நித்தியானந்தன் அறிய தந்திருக்கிறார்.
ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.

No comments:

Post a Comment