Friday, December 29, 2017

•என்னத்தைச் சொல்ல?

•என்னத்தைச் சொல்ல?
அமைச்சர் மனோ கணேசன் தனக்கு ஆபத்து என்று அதிரடிப்படை பாதுகாப்பு வாங்கியிருக்கிறார்.
ஆனால் அவர் தொண்டனோ மனோ கணேசன் பெயரைச் சொன்னால் எதிரி குலை நடுங்குவான் என்று போஸ்டர் ஒட்டுகிறான்.
சேகுவாராவின் பெயரை யார் யார் உச்சரிக்கிறது என்ற விவஸ்தையே இல்லாமற் போய்விட்டது.
பரவாயில்லை. மனோ கணேசனை “ஈழத்து சேகுவாரா” என்று எழுதாமல் விட்டது கொஞ்சம் ஆறுதல்.
மாவை சேனாதிராசா தன்னை “ஈழத்து சேகுவாரா” என்று கூறியபோதே தடுத்திருந்தால் இன்று இப்படி போஸ்டர் அடிக்க மனோ கணேசனுக்கு தைரியம் வந்திருக்காது.
இப்போது எமது கவலை என்னவென்றால் இந்த தேர்தல் முடியிறத்திற்குள்ளே இன்னும் என்னென்ன போஸ்டர்களை காண வேண்டி வருமோ?
குறிப்பு-
தமிழ்மக்களின் தலைவர்கள் என்கிறார்கள். ஆனால் சிங்கள பொலிஸ் பாதுகாப்பு இன்றி தமிழ் மக்கள் மத்தியில் போக முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?
மக்களுக்கு பாதுகாப்பு வழங்க பொலிஸ் இல்லை. ஆனால் மக்களின் வரிப் பணத்தில் எதற்காக இவர்களுக்கு பாதுகாப்பு?

No comments:

Post a Comment