Friday, December 29, 2017

•போங்கடா! நீங்களும் உங்கட மனிதவுரிமையும்!

•போங்கடா! நீங்களும் உங்கட மனிதவுரிமையும்!
டிசெம்பா-10 சர்வதேச மனிதவுரிமைகள் தினம்!
இன்று சர்வதேச மனிதவுரிமைகள் தினமாம். 
குழந்தைகளைக்கூட காக்க முடியவில்லை.
இந்நிலையில் மனிதவுரிமை தினம் தேவைதானா?
இலங்கையில் காணாமல் போனவர்களின் உறவுகள்
300 நாட்களாக வீதியில் உட்கார்ந்து போராடுகிறார்கள்
இந்த தினத்திலாவது எதாவது ஆறுதல் வார்த்தை
எமது தலைவர்கள் சொல்வார்களா என்று பார்த்தால்
பியர் விலை குறைத்த பட்ஜெட்டுக்கு ஆதரவு என்று செய்தி.
போராடும் காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு
போராடும் கேப்பாப்பிலவு மக்களுக்கு
போராடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு
எமது தலைவர் சம்பந்தர் அய்யா சொல்லும் செய்தி
விலை குறைக்கப்பட்ட பியரை குடியுங்கள் என்பதே.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தால்தான்
பட்ஜெட்டுக்கு ஆதரவு தரமுடியும் என்றுகூட
எமது தலைவர்களால் சொல்ல முடியவில்லையே.
காணாமல்போனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டால்தான்
உள்ளுராட்சி தேர்தலில் நாம் போட்டியிடுவோம் என்று
பங்களாளிக் கட்சிகள் ரெலோ, புளட் கூட சொல்லவில்லையே
பதவிக்கு போட்டி போடுபவர்கள் மக்களைப் பற்றி நினைக்கவில்லையே?
போங்கடா! நீங்களும் உங்கட மனிதவுரிமையும்!
குறிப்பு-
தமிழ் மக்களுக்கு விலை குறைந்த பியர் வழங்கி
தமிழ்மக்களை குடி மக்களாக்கும்
“பெருங்குடிமகன”; சம்பந்தர் அய்யாவுக்கு பாராட்டுகள்.
ஏற்கனவே அதிக மது விற்பனை செய்யும் மாவட்டமாக
யாழ் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
இனி அது இன்னும் சாதனை மாவட்டமாக மாறும்
சபாஸ் சம்பந்தர் அய்யா! தொடரட்டும் உங்கள் பணி.

No comments:

Post a Comment