Friday, December 29, 2017

•தோழர் வள்ளுவன் மறைவு!

•தோழர் வள்ளுவன் மறைவு!
தமிழக புரட்சி வரலாற்றில் மொத்த குடும்பமே சிறைவைக்கப்பட்டது எனில் அது புலவர் கலியபெருமாள் அவர்களின் குடும்பமே.
புலவர் கலியபெருமாளுடன் அவர் மகன் வள்ளுவனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நீண்ட கொடிய சிறைவாசத்தின் பின் புலவர் கலியபெருமாள் மற்றும் வள்ளுவன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
புலவர் கலியபெருமாளை சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்ற வேளைகளில் தோழர் வள்ளுவனுடனும் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
அவ்வாறு பேசும்பொழுதெல்லாம் “என்ன ஈழத்தில் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறதே” என்று வருத்தத்துடன் அவர் கேட்பார்.
ஈழத் தமிழர்கள் மீது மிகுந்த அன்பும் ஆதரவும் கொண்ட தோழர் வள்ளுவன் மறைவு எமக்கு பேரிழப்பாகும்.
நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூலை அவருக்கு வழங்கி அவரின் கருத்தை அறிவதற்கு ஆர்வமாக இருந்தேன்.
ஆனால் அதற்குள் அவர் மறைந்த செய்தி வந்து சேர்ந்திருப்பது ஏமாற்றத்தையும் மனவருத்தத்தையும் தந்துள்ளது.
அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தவர்கள் மற்றும் தோழர்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment