Friday, December 29, 2017

பாப்பாத்தி தலைமைச் செயலரை

பாப்பாத்தி தலைமைச் செயலரை அப்பலோவில் ஓடிச் சென்று பார்வையிட்ட தமிழக முதல்வருக்கு, பாதிக்கப்பட்ட மீனவர்களை சென்று பார்வையிட தோன்றவில்லை.
தமிழகம் வந்த பிரதமருக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை போட்டோவில் ஆய்வு செய்த இந்திய பிரதமர் மோடி மட்டுமே.
அதுவும் புயலால் பாதிக்கப்பட்ட போட்டோக்களை பூ மாலையால் அலங்காரம் செய்து பார்வையிட்ட பிரதமரும் மோடி மட்டுமே.
18 நாட்களுக்கு பின்னர் 10 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்னர். அதுவும் மீனவர்களே இந்த மீனவர்களை சென்று மீட்டுள்ளனர்.
கடற்படை சென்று மீட்கவில்லை. விமானப்படை சென்று மீட்கவில்லை. மீனவனே மீனவனை மீட்க வேண்டிய நிலை.
இன்னும் ஆயிரம் மீனவனைக் காணவில்லை. ஆனால் அரசோ எந்தவித அக்கறையும் அற்று இருக்கின்றது.
புயல்நிவாரணமாக 4000 கோடி ரூபா தந்து உதவ வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரியுள்ளார்.
ஆனால் மோடி அரசு வெறும் 250 கோடி ரூபாவை மட்டுமே தருவதற்கு சம்மதித்துள்ளது.
வருடந்தோறும் 85ஆயிரம் கோடி ரூபாவை வரியாக செலுத்தும் தமிழகம் 4ஆயிரம் கோடி ரூபா நிவாரணமாக தரும்படி கெஞ்சுகிறது.
ஆனால் பட்டேல் சிலைக்கு 2500 கோடி ரூபாவை வழங்கும் மோடி அரசு தமிழனுக்கு வெறும் 250 கோடி ரூபாவை மட்டுமே தரமுடியும் என இறுமாப்புடன் சொல்லுகிறது.
இலங்கை அரசுக்கு இரண்டு போர்க் கப்பலை அன்பளிப்பாக வழங்கிய மோடி அரசு தமிழக மீனவனை தேடுவதற்கு ஒரு கப்பலையும் தரமுடியாது என்று கூறுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் தமிழக விவசாயிகள் நிவாரணம் கேட்டு டில்லி சென்று போராடினார்கள்.
நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கிய பிரதமர் மோடி இந்த விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை என்று மறுத்தார்.
அதுமட்டுமன்றி காப்ரேட் கம்பனி முதலாளிகளின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபா கடன்களை தள்ளுபடி செய்த மோடி, இந்த விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுத்தார்.
தமிழா!
உன் கையில் அதிகாரம் இருந்தால் இப்படி கண்டவனிடமும் கெஞ்சவேண்டிய நிலை உனக்கு வந்திருக்குமா?

No comments:

Post a Comment