Friday, December 29, 2017

மிதப்பது தமிழன் பிணம் என்பதாலா இந்திய அரசு அக்கறையற்று இருக்கிறது?

மிதப்பது தமிழன் பிணம் என்பதாலா
இந்திய அரசு அக்கறையற்று இருக்கிறது?
உலகில் நான்காவது பெரிய கடற்படை என்கிறார்கள்
ஆனால் தமிழ் மீனவனை மீட்க ஒரு கப்பல் வரவில்லை
சுதந்திரதினத்தில் விமானத்தில் வித்தை காட்டுகிறார்கள்
ஆனால் அதில் ஒரு விமானம்கூட மீனவனை தேட வரவில்லை.
ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்கு வந்த தமிழக முதல்வரால்
புயலால் பாதிக்கப்பட்ட மீனவனை பார்க்க வர முடியவில்லை
11 நாட்கள் கடந்துவிட்டது. இன்னும் 1015 பேரைக் காணவில்லை
தப்பி வந்த மீனவனே மீண்டும் தேட செல்லும் துர்ப்பாக்கிய நிலை.
ஒருபுறம் மனிதவுரிமை தினம் கொண்டாடும் தமிழக அரசு
மறுபுறம் 5000 மக்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
கேரள அரசு இறந்தவர் குடும்பத்திற்கு 20 லட்சமும் அரச வேலையும் வழங்கப்படும் என்று அறிவிக்கிறது.
ஆனால் தமிழக அரசு போராடியவர்களை; மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கிறது.
கடலுக்குள் சென்ற தம் உறவுகள் திரும்பி வரமாட்டார்களா என மக்கள் கரையில் காத்துக்கிடக்கின்றனர்.
ஆனால் தமிழக அரசு ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் மூழ்கிக் கிடக்கிறது.
மாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட தமிழக மீனவனுக்கு கொடுக்க இந்திய அரசு தயாரில்லை.
மாட்டுக்கு மருத்துவமனை, அம்புலன்ஸ், இன்சுரன்ஸ், மற்றும் விசேட சட்டங்கள் வழங்கிய இந்திய அரசு, 1015 தமிழனைக் காணவில்லை என்றாலும் மௌனமாக இருக்கிறது.
செவ்வாய்க்கு ராக்கட் விட்ட இந்திய அரசு தமிழனை மீட்க ஒரு கப்பலை விடமுடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?
மிதப்பது தமிழன் பிணம் என்ற அலட்சியம் அன்றி வேறு என்ன?
குறிப்பு-
மீனவர்களுக்காக போராடியவர்களை கைது செய்த தமிழக பொலிஸ் அவர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்துள்ளனர். அதுமட்டுமன்றி
மீனவன் செத்தால் உங்களுக்கு என்ன? என்றும் கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment