Friday, December 29, 2017

இது, வழங்கப்பட்ட நீதி அல்ல வாங்கப்பட்ட நீதி!

•இது,
வழங்கப்பட்ட நீதி அல்ல
வாங்கப்பட்ட நீதி!
பிரதமர் மோடி கலைஞர் கருணாநிதியை வீடு தேடிச்சென்று சந்தித்தபோதே 2ஜி வழக்கின் தீர்ப்பு எப்படி அமையப்போகிறது என்பது தெரிந்து விட்டது.
வாக்குமூலத்தை மாற்றி எழுதி பற்றரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு மரண தண்டனையை வாங்கிக்கொடுத்த சிபிஜ, பல லட்சம் கோடி ரூபா ஊழல் செய்தவர்களுக்கு எதிராக ஒரு சாட்சியைக்கூட ஆஜர்படுத்தவில்லை.
வழக்கு நடந்த 7 வருடத்தில் ஒரு சாட்சியாவது தகுந்த ஆதாரத்துடன் வராதா என தான் காத்திருந்ததாக நீதிபதி கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி, வழக்கு தாக்கல் செய்த சிபிஜ கையெழுத்து போடக்கூட சில வேளைகளில் வரவில்லை. அந்தளவுக்கு அக்கறையற்று இருந்தது என்று கூறியுள்ளார்.
அதாவது, 2 ஜி ஊழல் நடைபெறவில்லை என்று நீதிபதி தீர்ப்பு கூறவில்லை. மாறாக அதை நிரூபிப்பதற்கு தேவையான சாட்சிகளை சிபிஜ ஆஜர்படுத்தவில்லை என்றே கூறியுள்ளார்.
சிபிஜ பிரதமர் மோடியின் அதிகாரத்திற்கு உட்பட்டது. சிபிஜ சாட்சிகளை ஆஜர்படுத்தாமைக்கு பிரதமர் மோடியே பொறுப்பாகும்.
ஒரே நாளில் சசிகலா குடும்பத்தின் 157 இடங்களில் ரெய்டு நடத்திய மோடி அரசால் 2ஜி வழக்கில் ஒரு சாட்சியைக்கூட ஏன் ஆஜர்படுத்த முடியவில்லை?
இந்த தீர்ப்பின்மூலம் பெரிய கம்பனி முதலாளிகள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிய அரசியல்வாதிகள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் நீதித்துறைமீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை சீரழிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment