Friday, December 29, 2017

•குல்பூஷன் ஜாதவ் ற்கு ஒரு நியாயம்

•குல்பூஷன் ஜாதவ் ற்கு ஒரு நியாயம்
நளினிக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இந்திய அரசின் நியாயமா?
உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷன் யாதவ்ற்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷன் யாதவ்வை அவரது மனைவி மற்றும் தாயார் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இவ்வாறு பார்வையிடச் சென்ற குடும்பத்தினரிடம் பாகிஸ்தான் அரசு மனிதாபிமானமற்று நடந்துகொண்டதாக இந்திய துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசு மனிதாபிமானமற்று நடந்து கொண்டது கண்டனத்திற்கு உரியதுதான். நாமும் அதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆனால் பாகிஸ்தான் அரசைக் கண்டிக்க இந்திய அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது?
ஏனென்றால் பாகிஸ்தான் அரசு ஆகக்குறைந்தது அக் குடும்பத்தினரை பார்வையிடுவதற்காவது அனுமதித்துள்ளது.
ஆனால் இந்திய அரசு நளினியின் மகள் தன் தாயாரைப் பார்வையிடுவதற்குகூட அனுமதி வழங்காமல் மறுத்து வருகிறதே.
நளினியின் மகள் தற்போது லண்டனில் இருக்கிறார். அவர் மருத்துவ படிப்பு முடித்து டாக்டராக இருக்கிறார்.
அவர் சிறையில் இருக்கும் தன் தாய் நளினி மற்றும் தந்தை முருகன் ஆகியோரைப் பார்வையிடுவதற்கு அனுமதி கோரி வருகிறார். ஆனால் இந்திய அரசு அனுமதியளிக்க மறுத்து வருகிறது.
நளினி ஒரு இந்திய பிரஜை. நளினியின் மகள் பிறந்தது இந்தியாவில். சட்டப்படி நளினியின் மகள் இந்திய பிரஜாவுரிமை பெறக்கூடியவர்.
ஆனால் அவர் இந்திய பிரஜாவுரிமை கோரவில்லை. மாறாக தன் பெற்றோரை பார்வையிட விசா மட்டுமே கோருகிறார்.
ஆனால் சட்டப்படி மட்டுமல்ல மனிதாபிமான அடிப்படையிலும்கூட நளினியின் மகள் தன் பெற்றோரை பார்வையிட இந்திய அரசு மறுத்து வருகிறது.
அதேவேளை இந்திய அரசு குல்பூஷன் யாதவ் குடும்பத்தை பாகிஸ்தான் அரசு மனிதாபிமானத்துடன் நடத்தவில்லை என்று கண்டனம் தெரிவிக்கிறது.
இது என்ன நியாயம்?

No comments:

Post a Comment