Friday, December 29, 2017

தளபதி ஸ்டாலினை மாண்புமிகு முதல்வர் என்று அழைப்போம். ஸ்டாலின் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது- வைகோ பேச்சு

தளபதி ஸ்டாலினை மாண்புமிகு முதல்வர் என்று அழைப்போம். ஸ்டாலின் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது- வைகோ பேச்சு
வைகோ அவர்களே!
இதை அன்றே ஒத்துக்கொண்டிருந்தால் அநியாயமாக 7 உயிர் உங்களுக்காக மரணமடைந்ததை தவிர்த்திருக்கலாமே!
கடந்த வருடம் திமுக வை ஊழல் கட்சி என்றீர்கள். இந்த வருடம் திமுக வை ஆட்சியில் ஏற்றுவோம் என்கிறீர்கள். திமுக எப்போது ஊழலற்ற கட்சியாக மாறியது?
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காங்கிரசுடன் துணை போன கட்சி திமுக என்று கூறினீர்களே. இப்போது அதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கோரியுள்ளாரா?
பாலகன் பாலச்சந்திரன் படுகொலைக்கு காரணமான திமுக வை மறக்க முடியாது என்றீர்களே. இப்போது எப்படி அதனை மறந்தீர்கள்?
மருத்துவ சிகிச்சைக்காக வந்த பார்வதியம்மாளை இரக்கமின்றி திருப்பி அனுப்பிய திமுக வை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்றீர்களே. இப்போது எப்படி மன்னித்தீர்கள்?
நீங்கள் அடிக்கடி கூட்டணி மாறுவது உங்கள் அரசியல். அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.
ஆனால் குறைந்த பட்சம் ஈழத் தமிழினத்திற்கு திமுக இழைத்த துரோகத்திற்கு ஒரு வருத்தமாவது ஸ்டாலின் தெரிவித்த பின்னர் உங்கள் ஆதரவை கூறியிருக்கலாம்.

No comments:

Post a Comment