Friday, December 29, 2017

•இது ஒரு அதிசய மிருகம்!

•இது ஒரு அதிசய மிருகம்!
காணாமல் போனோர் பிரச்சனை என்றால் கடிதம் எழுதும்
முதலமைச்ருக்கு எதிராக அமைச்சர்கள் பிரச்சனை என்றாலும் கடிதம்தான் எழுதும்
ஆனால் தனது பதவிக்கு ஆபத்து என்றால் செல்வம் அடைக்கலநாதனுடன் நாலு மணி நேரம் தொலைபேசியில் பேசும்.
திருகோணமலையில் இருந்தாலும் யாழில் இருக்கும் மாவை சேனாதிராசாவுடனும் கொழும்பில் இருக்கும் சுமந்திரனுடனும் மாறி மாறி பல மணி நேரம் தொலைபேசியில் உரையாடும்.
அதுமட்டுமல்ல தனது பதவியைக் காப்பாற்றுவதற்காக எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயார் என்று அறிக்கையும் விடும்.
கேப்பாப்பிலவில் மக்கள் போராடுவது கண்ணுக்கு தெரியாது
காணாமல் போனோர் பிரச்சனை பற்றி கூறினால் காது கேட்காது
அரசியல் கைதிகள் விடுதலை குறித்து கேட்டால் திறப்பு தன்னிடம் இல்லை என்று நக்கல் பேசும்.
ஆனால் இந்திய தூதுவர் விருந்துக்கு அழைத்தால் கண் காது மட்டுமல்ல எல்லா உறுப்பும் நன்கு வேலை செய்யும்.
அதுவும் சந்திரிக்காவுடன் இரகசியம் பேசுவதென்றால் தானாக குஷி வந்துவிடும்.
தனக்கு பதவி, இரண்டு சொகுசு பங்களா, ஆறு சொகுசு வாகனம், 40 சிங்கள பொலிஸ் பாதுகாப்பு என அரசிடம் கேட்டு வாங்கும்
ஆனால் தமிழ் மக்களுக்கு வேலை வழங்கும்படி கேட்டால் அப்புறம் தீர்வு பெற முடியாது என்று சொல்லும்.
தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்காக யாருடனும் பேசாது. ஆனால் தன் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஆபத்து என்றவுடன் பிரதமரிடம் ஓடிச் செல்கிறது. இந்தியாவிடம் உதவி நாடுகிறது. செல்வம் அடைக்லநாதனிடம் கெஞ்சுகிறது.
தேர்தல் வந்தால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும். ஆனால் பதவி பெற்றதும் புலிகளை பயங்கரவாதிகள் என்று பாராளுமன்றத்தில் பேசும். ரணிலுடன் சேர்ந்து சிங்கக் கொடியை ஆட்டும்.
அதுமட்டுமா! தமிழ் மக்களைக் கொன்ற மகிந்த ராஜபக்சவை நாட்டின் தேசியதலைவர் என்று கூச்சமின்றி புகழ் பாடும்.
இது ஒரு அதிசய மிருகம்தான். ஏனெனில் இது எமனும் மறந்த கிழடு அல்லவா!

No comments:

Post a Comment