Friday, December 29, 2017

கிருத்திகன் நடராஜா ( Kiruthikan Nadarajah) அவர்கள் “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
வவுனியாவைச் சேர்ந்த கிருத்திகன் நடராஜா ( Kiruthikan Nadarajah) அவர்கள் “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள கிருத்திகன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
முதலில் என்னை மன்னிக்க. இன்று தான் உங்கள் நூல் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இவ்வளவு நாளும் பரீட்சைகள் மற்றும் எனது இறுதியாண்டு படிப்போடு பறந்து சென்று விட்டது.
நேற்றைய தினம் தான் எனது மின்னஞ்சலினை சரிபார்க்கும் போது, உங்களது புத்தகம் இருந்தது தெரிய வந்தது. ஒரு மாதிரியாக வாசித்து முடித்து விட்டேன்.
சில விடயங்களை அலச விரும்புகிறேன்.
தோழர் தமிழரசனின் அறிமுகம் சிறப்பு.
அதனைத் தொடர்ந்து இவ்வளவு காலமும் நான் “பேரவை” என்ற அமைப்பு இலங்கையில் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்று நினைத்திருந்தேன். அது முற்றுமுழுதான பிழையான விடயம் என்பதையும் பின்னர் தான் புரிந்து கொண்டேன்.
இப்பொழுதெல்லாம் முன்பு ஆயுதம் தூக்கிய அமைப்புக்கள் தாங்கள் ஏதோ உத்தமர்கள் போல தம்மை வெளிக்கட்டி வருகின்றனர். அதனை அப்படியே இந்த நூல் நிச்சயம் மாற்றி விடும்.
இந்திய அரசாங்கத்தின் றோ செயற்பாடுகள் அன்று தொட்டு இன்று வரை அதே மாதிரியாகவே இருந்து வருகிறது.
தொடர்ச்சியாக உங்கள் இப்படியான பதிவுகள் நிச்சயம் வாசிப்போர் மனங்களில் ஏதும் மாற்றத்தினை ஏற்படுத்த வழிவகுக்கும்.
தொடர்ந்தும் உங்கள் பணியை செவ்வனே சிறப்புற செய்யுங்கள்.
நன்றியும், வாழ்த்துக்களும்,
கிருத்திகன் நடராஜா

No comments:

Post a Comment