Friday, December 29, 2017

நடராசா சிவகுமார் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
லண்டனில் இருக்கும் நடராசா சிவகுமார் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இவர் Accountant ஆக பணி புரிகின்றார். இவர் ஒரு சிறந்த தமிழ் இன உணர்வாளர். இவர் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகங்களுக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்து வருகின்றார்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள நடராசா சிவகுமார் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு,
Man is an economic animal not a social animal as we think.
இந்த புத்தகத்தினை வாசிக்கும் போது வேதனையும் இந்திய உளவுப்படையின் நயவஞ்சகத் தன்மையையும் புரிந்து கொள்ளக்கூடியதாய் உள்ளது.
ஆயினும் ஆரம்பத்தில் இது ஒரு மார்க்சிய லெனினிய , மாவோ வை பற்றிய புத்தகமோ என்று எண்ணத் தோன்றியது. பின்பு அது மாறி தமிழரசனை பற்றிக் கூறியிருக்கிறது.
தமிழரசன் புலவர், சுந்தரம், நெப்போலியன் போன்றோர் மிகவும் அளவில்லா அன்பு மக்களிடம் வைத்து அவர்களுக்காக உழைத்தது அவர்கள் மீது மரியாதையையும் மதிப்பையும் தருகிறது.
இந்த புத்தகம் ஓரளவு இந்த உண்மையை தமிழ் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் என்பதில் எனக்கு நல்ல நம்பிக்கை உள்ளது. அவர்களது சுய மரியாதை வறுமையிலும் தெளிவாக தெரிகிறது.
இப்படியான பலர் நட்சத்திரங்களாக ஒவ்வொரு சமுதாயத்திலும் வந்து போவார்கள். அக புற காரணிகள் சரியாக அமையுமிடத்து அவர்கள் ஒரு லெனின் ஆகவோ அல்லது மாவோ ஆகவோ பெயர் எடுப்பார்கள். அர்ப்பணிப்பில் இவர்கள் சில வேளைகளில் அவர்களை மிஞ்சக் கூடும்.
நான் ஒரு மார்க்சியவாதி அல்ல. ஏனெனில் மனிதரின் ஆசைகளிற்கு மார்க்சி;யம் ஒரு பதில் வைக்காது.
இப்போ மாவோ இருந்திருந்தால் தோழர் பாலன் அவரை இலங்கை விடயத்தில் எதிர்த்திருப்பார், ஏனெனில் மாவோவும் இலங்கையுடன் சேர்ந்து தமிழ் மக்களை கொலை செய்திருப்பார். (உதாரணம் காஸ்ட்ரோ).
மாவோஇன் காலத்தில் தான் ஆப்பிரிக்காவை சீனா சுரண்டத் தொடங்கியது.
பஞ்ச சீல கொள்கையை ஆதரித்த சீனா இந்தியாவை வறிய நாடு என்று கூட பார்க்காது ருசியவிடம் அறிந்த தொழில் நுட்பத்தினை பாவித்து இந்தியாவினை ஆக்கிரமித்தது.
நான் இந்தியாவிற்காக வக்காலத்து வாங்க வரவில்லை ஏனெனில் இந்தியா செய்ததுபோல் ஒருவரும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கைத் துரோகத்தை செய்யவில்லை.
பக்கம் 52:
ரொம்பலூரில் உள்ள குளத்தில் தமது நண்பர்கள் குளிக்க மறுத்ததற்கு அவர்களது வர்க்க சிந்தனைகள் கரணம் என்று கூறுவது என்ன வகையில் பொருந்தும். என்னை பொறுத்தவரை பாட்டாளி வர்க்கம் ஒரு கற்பனை வர்க்கம். ஏனெனில் ஒருபோதும் ஆசைகளுக்கு ஒருநாளும் முற்றுப் புள்ளி வைக்க முடியாது.
ரொம்பலூரில் உள்ள ஊத்தை குளத்திற்கும் வர்க்கத்திற்கும் என்னையா தொடர்பு? உங்களுக்கு மார்க்சியவாதம் என்ற கண்ணாடி போடாமல் பார்க்க முடியாதா?
இப்போ நாங்கள் இங்கிருந்து இலங்கை போனால் Toilet Tissue தேடுகிறோம். நாங்கள் இங்கு வந்து வர்க்கம் மாறி விட்டோமா? நீங்கள் சொல்லும் வர்க்கத்தை சார்ந்தவர்களை ஒருவாறாக துப்பரவாக வைத்து விட்டு அவர்களை அந்த குளத்தில் போய் குளி என்றால் அவர்களால் குளிக்க முடியுமா? அப்புறம் என்ன நடக்குது என்று பாருங்கோ. இது தான் மார்க்சியவாதம்.
பக்கம் 58:
ஈழ போராளிகள் தமிழர்சனின் தீர்க்க தரிசனத்தை ஏற்றிருந்தால் இலங்கையில் இந்திய ஆக்கிரமிப்பை தவிர்த்து இருக்கலாம் என தோழர் பாலன் எழுதியதை என்னால் ஒத்துப்போக முடியவில்லை.
காரணம் இந்திய அரச இயந்திரம் ஒரு பலவீனமான இலங்கை தமிழரை எதிர்பார்த்தது. அவர்கள் ஒருபோதும் சிங்களவரை ஒரு எதிரியாக பார்க்கவில்லை. ஆனால் தமிழர்களை காழ்ப்புணர்ச்சியுடன் தான் பார்த்தார்கள்.
அவர்கள் தங்களது resources ஐ உபயோகித்து எவ்வாறாயினும் எங்களை உடைத்திருப்பார்கள். இந்தியன் சனத்தொகையுடன் தமிழ் நாட்டினை பார்த்தால் எங்களது விகிதத்தினை விட குறைவு. எனவே தமிழ் நாட்டுக்கு ஒரு பாடமாகவே தமிழ் மக்களை இலங்கையில் கொலை செய்து பயத்தினை ஊட்டினார்கள்.
அது அவர்களுக்கு எவ்வளவு தூரம் லாபத்தினை கொண்டு வரும் என நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எங்களுக்குள் கொழுந்து விட்டு எரியும் துன்பம் ஒரு நாள் அவர்களை எரிக்கும். இயற்கை அத்தகு பதில் சொல்லித்தான் ஆகும்.
பக்கம் 60:
பாலாவின் அறைகூவல் சிங்கள தமிழ் மக்கள் ஒன்று கூடி இந்தியாவுக்கு எதிராக போராட வேண்டும் என்பதை நான் முற்றாக மறுக்கிறேன்.
ஏனெனில் இது எங்களை இன்னும் பலவீனப்படுத்தி சேலை உரிய வைக்கும், இது சிங்களவரது எச்சம் அவர்களே துப்புரவு செய்யட்டும். முதலில் எங்களை அங்கீகரிக்கட்டும் நாட்டு பிரஜை ஆக, ஒரு தேசிய இனமாக, பின்பு நாங்கள் ஜக்கியப்படுவது பற்றி சிந்திக்கலாம்.
பக்கம் 67:
இலங்கை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு? எந்த விதத்தில்? சிங்கள தமிழ் வெங்காயங்களை கொண்ட நாடு. தற்போதைய யுத்த உபகரணங்களுடன் ஒப்பிடும் போது ஒரு இடமும் கேந்திரம் இல்லை ஏனெனில் நீங்கள் எங்கிருந்தும் எங்கும் பாயும் ஏவுகணைகள் உள்ளன. இலங்கையில் திறமை(Skill) பெரிதாக இல்லை. எனவே இந்த வாதம் பொருந்தாது.
பக்கம் 72-79:
TNA ஒரு பல்லு பிடுங்கப்பட்ட கிழட்டு பாம்பு. அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. இந்தியா இரு என்றால் இருக்கும் நிலையில் உள்ளனர்.
அவர்களை திட்டிப் பிரயோசனம் இல்லை. ஒன்று அவர்கள் செய்யலாம் கடைசி நேரத்தில் இந்தியாவின் விருப்பை விட்டு விலகி நல்ல புத்திஜீவிகளுக்கு கொடுக்கலாம்.
தங்களது தலைமையினை நல்ல காத்திரமான இந்தியாவுக்கு சோரம் போக முடியாதது ஒன்றாக மாற்ற வேண்டும். இது மிகவும் கடினம். சொல்வது சுலபம் செய்வது கடினம்
பக்கம் 81:
தனியார் கல்வி இந்தியா கொடுப்பது பற்றி ஏன் நாங்கள் அலட்டி கொள்ள வேண்டும். எல்லா வெளிநாடுகளும் நீங்கள் போய் காசு கட்டி படிக்கிறீர்கள் என் அதை அவர்கள் உங்கள் நாட்டில் கட்டிட கொதிப்படிக்கிறீர்கள்? இது இலங்கைக்கு நாளடைவில் நல்லது. ஒரு நாள் இலங்கைக்கு நல்ல ஸ்கில்ஸ் (Skills ) வந்து சேரும்.
பக்கம் 84:
இந்தியாவை பொறுத்தவரை இலங்கை ஒரு சிங்கள மாநிலம். உண்மையில் அவர்களுக்கு இலங்கை தேவையில்லை ஆனால் இலங்கைக்கு இந்தியாவை விட்டால் ஒருத்தரும் இல்லை என்ற நிலை. இந்தியாதான் அரசியல் பாதுகாப்பு இந்த போரின் போது இலங்கைக்கு எடுத்து கொடுத்தது.
தமிழனாக பார்க்கும் போது சிங்களவர்களுக்கு மிகப் பெரிய உதவிகளை போரில் இந்தியா கொடுத்திருக்கிறது. தமிழ் மக்களை அகதி நிலைக்காக்கி எங்களை ஓர் அடிமை இனமாக சிங்களவனுக்கு மாற்றி கொடுத்துள்ளது. இதற்கு சிங்களவர்கள் நன்றி கூறுகிறார்கள் போலும்.
India gave the political cover to Srilanka During War in the international arena. So Srilanka has an obligation to India. Only people got betrayed is Tamils by Indians who used us to bring Srilanka to indian Line and then destroyed us. LTTE without realising helped all along for the Indian Course.
LTTE இந்தியாவின் அபிலாஷய்களுக்கு தங்களை அறியாமல் அர்ப்பணித்து விடடார்கள்.
பக்கம் 85- 86:
இலங்கையில் உள்ளவர்கள் ஒரு வேர்ல்ட் கிளாஸ் (WORLD CLASS ) ஸ்கில்ஸ் வைத்திருப்பதாக நான் எண்ணவில்லை. அதற்கான சூழ் நிலைகள் வரவில்லை. எனவே ஆரம்பத்தில் இந்தியாவில் இருந்து வந்தால் என்ன? எனவே இந்தியயர்கள் வந்து உங்களது வேலைஐ கொண்டு போய் விடுவார்கள் என்பது மடை தனம்
இலங்கையில் இருக்கும் பலர் தங்கள் முதுகில் சொரிந்து விட்டு தங்களை கெட்டிக்காரர் என்று எண்ணுபவர்கள் அது இரு இனத்துக்கும் பொருந்தும். இவர்கள் யாவரும் றீ ரெயின் பண்ணுப்பட வேண்டும்.
சம்பளம் தீர்மானிப்பது சந்தையும் அவரது திறமையும். எனவே இந்த கூற்று கேள்விக்குறியே? (supply and demand , market determine and the skills level )
ராஜிவ் காந்தி / இந்தியன் காங்கிரஸ்
இவரது கொலை காகம் இருக்க பனம் பழம் விழுந்தது போல் ஆகி எமது மக்களின் தலையில் விழுந்து விட்டது. அவர் செய்த கொலைகள் மறுக்கப்பட்டு (எனது உறவினர் சுடப்படடார்) ஆனால் அவரது மரணம் பெரிதாக்கப்பட்டது. அதனால் தமிழ் மக்கள் தான் வஞ்சிக்கப்பட்டார்கள்.
உண்மையில் அதில் இந்தியாவும் மேற்கு உலகம் நன்மை அடைந்தது. இந்தியன் உளவுத்துறை அதை தமிழ்நாட்டையும் எங்களயும் பிரிக்க அதைப் பாவித்தது. அவர்கள் ராஜிவ் இறப்பை விரும்பினார்கள்.
எங்களது ராஜதந்திர எல்லாம் வல்ல சூரியனும் தலையில் பட்டத்தினை ஏற்றார். மேனன், நம்பியார் போன்றோர் ராஜீவின் தனிப்படட உறவினால் மிக பழிவாங்கும் எண்ணத்துடன் செயல் படடார்களே ஒழிய ராஜீவின் இறப்பு அவர்களுக்கு பெரிதல்ல.
எப்போதும் தமிழ் மக்களுக்கு ஆதரவு பெருகும் போது இந்திய உளவுத்துறையும் அரசியல் இயந்திரமும் அதை எங்களுக்கு எதிராக பாவித்தது.
இது ஒரு மூக்கு சளி. கருணாநிதி பிரபாகரன் இதற்கு " sorry" சொல்வார் என்று எதிர் பார்த்தாராம்? பாலசிங்கம் அது துயர சம்பவம் என்று விடடார்.
எம்மில் பலர் காங்கிரஸ்தான் இதற்கு காரணம் என்றும் சோனியா தான் மூல காரணம் என்று நினைக்கிறது நகைப்பு. இதை கூட இந்திய அரசியந்திரம் தொலை நோக்குடன் அவர்களில் பழியை போட்டுவிட்டுத் தப்பப் பார்க்கிறது.
சோனியா காந்தியிலும் காங்கிரஸிலும் பழியை போடு விட்டு எங்களது அடுத்த சந்ததியினை மறக்க வைத்து தப்பலாம் என் நினைக்கிறார்கள்.
இலங்கையில் ஒரு போர்க்குற்ற விசரனை நடந்தால் அது இந்தியாவுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து அதை எல்லா விதத்திலும் தடுக்கிறது.
பக்கம் 126:
உளவு துறையின் கொடூரம் பற்றியும் அதன் மூர்க்கத் தனத்தையும் பற்றியும் இந்த பக்கம் நன்றாக விளக்குகிறது. அது எவ்வாறு நயவஞ்சகமாக தோழர் தமிழரசனைக் கொன்றது என்று அருமையாக விளக்குகிறது.
பக்கம் 142:
புலவர் கலியபெருமாள் அவர்களின் எழுத்து நமக்கு துன்பத்தையும் அவரது கவலையையும் தருகிறது. அவர் எவ்வாறு தமிழரசனின் இறப்பை ஜீரணிக்க முடியாமல் தவித்தார் என்பது விளங்குகிறது.

பக்கம் 151:
நெடுமாறன், வைகோ, சீமான் ஆகியோர் இந்தியாவின் ஏஜென்ட்கள். அவர்கள் இறுதி யுத்தத்தின் பின்பு பிரபாகரன் மரணித்தது தெரிந்தும் அதை தமிழ் நாடு மக்களுக்கு கூறாமல் ஒளித்தவர்கள். இது அவர்களுக்கு கிடைத்த instruction iபடி நடந்தார்கள்.
அவர்களுக்கு தெரியும் தமிழ் நாடு கொந்தளிக்கும் என்று. அதை தவிர்ப்பதற்கு நாடகம் ஆடினார்கள். இதனை இந்திய உளவுத்துறை அவர்களை வைத்து நன்றாக கையாண்டது.
நான் இன்னுமொரு ஏஜென்ட் தமிழருவி மணியனுடன் கதைத்த போது விரைவாக நழுவி விட்டார். அவர் எல்லாப் பிழைகளையும் சோனியாவில் போட்டுவிட்டு இந்திய அரச இயந்திரம் ஒரு தவறும் செய்யவில்லை என்று கூறித் திரிந்தவர். நாங்கள் challenge பண்ணியவுடன் நழுவினார்.
Page159/ Page 108 1st para: Compare
தமிழரசனின் பண்பும்; மக்களை நேசிக்கும் தன்மையும் அவரது ஆயுத உபயோக மறுப்பு துல்லியமாக தெரிகிறது. குறிப்பாக தோழர் பாலன் இலங்கையில் இன்னொரு தலைவர் அதனைப் பாவித்து சிறந்த தலைவராக வந்ததாகவும் கூறியிள்ளார். நிச்சயமாக அந்த தலைவரை விட தமிழரசன் மக்களைக் கூடுதலாக நேசித்திருப்பார் என ஊகிக்க முடிகிறது.
பக்கம் 161 :
பாலசிங்கம் அவர்களை மக்கள் நிப்பாடினார்கள் என்று. அது இந்திய உளவுத்துறையின் ஒரு நாடகம். இங்கு சிலர் சொல்லி திரிவார்கள் ராஜபக்சவே வருகையை தாங்கள் தடுத்தாக. உண்மையில் பிரிட்டிஷ் உளவு துறை அந்த நாடகம் ஆடி ராஜபக்ஷவை தம் வழிக்கு கொண்டு வர முயற்சி செய்தார்கள்
சாத்வீகப் போராட்டமும் அதன் வலிமையும்
எமது போராட்டத்தில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் தமிழ் மக்கள் கடைசி மூன்று நாட்களில் கொல்லப்பட்டு இருப்பார்கள். இதில் ஒரு பத்தில் ஒரு பங்கு நெறியாக நடத்தப்பட்ட ஒரு சாத்விகப் போராடத்தில் கொல்லப்பட்டிருப்பின் எங்களது வலிமை பன்மடங்காக உயர்ந்தும் ஆதரவும் பன்மடங்கு பெருகியிருக்கும். அதற்கு நல்ல நேர்மையான தலைமை தேவை. துரதிருஷ்டவசமாக எங்களிடம் நல்ல தலைமை தற்போது இல்லை. ஏனெனில் எங்களது சமுதாயம் மிகவும் அறிவு பூர்வமானது அல்ல. இப்போது தான் அறிவு வழியில் காலடி எடுத்து வைத்து இருக்கிறது, நிட்சயமாக நாங்கள் நல்ல தலைமயுடன் மீண்டும் ஒளி வீசுவோம்

No comments:

Post a Comment