Friday, December 29, 2017

மழைக்குகூட பள்ளியில் ஒதுங்காதவனை எல்லாம் யாராடா பட்டமளிப்பு விழாவுக்கு கூப்பிட்டது?

•மழைக்குகூட பள்ளியில் ஒதுங்காதவனை எல்லாம்
யாராடா பட்டமளிப்பு விழாவுக்கு கூப்பிட்டது?
யார் யாரை எது ஏதுக்கு கூப்பிடுறது என்று ஒரு விவஸ்தையே இல்லையாடா?
கேப்பாப்பிலவில் மக்களுடன் சேர்ந்து குந்தாதவர்களை,
காணமல்போனவர்களின் உறவகள் 290 நாட்காக கொட்டிலில் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்களுடன் ஒருநாள் கூட உட்காராதவர்களை,
எதுக்கடா பட்டமளிப்புவிழாவில் அழைத்து குந்த வைத்துள்ளீர்கள்?
படித்தாலும் வேலை கிடைக்காது. வேலை கிடைத்தாலும் ஒரு வீடு கட்ட உழைக்க முடியாது.
ஆனால் எந்த படிப்பும் இல்லாமல் பாராளுமன்ற உறுப்பினராகி கோடி கோடியாக உழைக்கலாம்.
ஒன்றல்ல நாலு வீடுகளை கட்டலாம். 5 கோடி ரூபா சொகுசு வாகனம் ஓடலாம் என்பதை மாணவர்களுக்கு காட்டவா இவங்களை அழைத்தீங்கடா?
இவங்களை பார்த்தா மாணவர்களுக்கு படிப்பு வருமா? அல்லது படித்த படிப்பில் மதிப்புத்தான் வருமா?
ஒருவர் மாணவி வித்யா கொலை செய்யப்பட்டபோது அது குறித்து அக்கறை கொள்ளவில்லை. மாறாக தன் மகளுக்கு ஜனாதிபதியை அழைத்து வந்து பிறந்தநாள் கொண்டாடினார்.
இன்னொருவர் மாணவி வித்யா கொலையாளியை தப்பவைத்த குற்றச்சாட்டில் விசாரணைக்கு அழைத்தபோது கனடாவில் போய் ஒளிந்து இருந்தவர்.
ஒருவர் சப்றா நிதிநிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி பணம் சுருட்டியவர். இன்னொருவர் கட்சிக்கு நிதி என்று வாங்கி தன் குடும்ப நிதியாக மாற்றியவர்.
மக்கள கடன் தொல்லையால் தற்கொலை செய்கிறார்கள். ஆனால் இந்த தலைவர் மாவிட்டபுரத்தில் கட்டும் வீட்டிற்கு மாபிள் கற்கள் இறக்குமதி செய்கிறார்.
இனியாவது இப்படிப்பட்டவர்களை தயவு செய்து பட்டமளிப்பு விழாக்களுக்கு அழைக்காதீங்கடா!

No comments:

Post a Comment