Friday, December 29, 2017

மாகாணசபையில் தூங்கியவர்

மாகாணசபையில் தூங்கியவர்
மாநகரசபையில் மேயராகி தூங்குவதற்கு
தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா?
இதுவரை வடமாகாணசபையில் தூங்கிக்கொண்டிருந்த ஆனோல்ட் என்பவரை யாழ் மாநகரசபை மேயர் வேட்பாளராக்கினால் அப்புறம் அவர் மாநகரசபையில் தூங்குவார். இதற்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?
மட்டக்களப்பில் பணம்படைத்தவர்களுக்கும் மணற்கொள்ளையர்களுக்குமே தமிழ்தேசியகூட்டமைப்பு வாய்ப்பு வழங்கியுள்ளது என்று முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியத்துக்கு எதிராக இருந்தவர்களும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும், தமிழ் மக்களுடைய ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்களும் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தேர்தலில் குதித்துள்ளமை கட்சியை பலவீனப்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்று முன்னாள் தமிழ்தேசியகூட்டமைப்பு எம்.பி சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
தவறாக வேட்புமனு தாக்கல் செய்தமையினால் ஆலையடிவேம்பு, சம்மாந்துறை பிரதேச சபைகளுக்குரிய தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுகூட தெரியாமல் “அனைத்து உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும்” என்று சுமந்திரன் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்.
இதுகூட பரவாயில்லை. ஆனால் பதவிக்காக இவர்கள் றோட்டில் அடிபடுவதைக்கூட “ஆரோக்கியமான சண்டையாக நான் பார்க்கிறேன்” என்று சுமந்திரன் அறிக்கை விடுவதைத்தான் தாங்க முடியவில்லை.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் 59 சிறுமிகள் உட்பட 80 சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடம் நவம்பர் மாதம் வரையில் 62 சிறுமிகள் 7 சிறுவர்கள் உட்பட மொத்தம் 69 சிறுவர்கள் இதே மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலை செய்துள்ளனர்.
அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளும் இதே மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு உள்ளனர்.
இப்போது பதவிக்காக அடிபடும் எந்த வேட்பாளர்களும் இந்தப் பிரச்சனைகளுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை. அவர்கள் பதவி பெற்றாலும் இனி எதுவுமே செய்யப் போவதில்லை.
வடக்கு கிழக்கில் உள்ள 79 உள்ளுராட்சி சபைகளில் இருந்து 1566 உறுப்பினர்கள் இம்முறை தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள்.
ஒரு சாதாரண உள்ளுராட்சி உறுப்பினரின் மாதாந்த சம்பளம் 15000ரூபா எனில் 1566 உறுப்பினர்களின் மாதாந்த மொத்த சம்பளம்- 23490000 ரூபா.
1566 உறுப்பினர்களின் 4 வருட மொத்த சம்பளம்- 1127520000 ரூபா. அதாவது சுமார் 113 கோடி ரூபா.
இந்த 113 கோடி ரூபாவை பயன்படுத்தி சிறுவர் தற்கொலையை நிறுத்தலாம் அல்லது விதவைகளுக்கு வாழ்வாதார உதவிகள் செய்யலாம்.
அதுமட்டுமல்ல, இம்முறை இலங்கை முழுவதும் 8825 உள்ளுராட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படப் போகிறார்கள்.
அப்படியாயின் இந்த 8825 உறுப்பினர்களுக்கு 4 வருடத்தில் வழங்க இருக்கும் மொத்த சம்பளம் - 6354000000 ரூபா. அதாவது சுமார் 635 கோடி ரூபா.
இதைவிட மேயர், சேர்மன், பிரதேசசபைத் தலைவர் போன்றவர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் அதிகம்.
இதைவிட அபிவிருத்திக்கு வழங்கும் பணத்தில் கமிசன் பெற்றுக்கொள்ளவும் இடமளிக்கப்டுகிறது.
இப்போது புரிகிறதா? என் சுமந்திரனும் அவருடைய ஆட்களும் பதவிக்காக போட்டி போடுகின்றார்கள் என்று?
இவர்கள் பதவி பெறவும் பணம் சம்பாதிக்கவும் நாங்கள் அவர்களுக்கு வோட்டு போடவேண்டியிருக்கிறது?

1 comment:

  1. இதுவொரு பாமரத்தனமான பதிவு. வாக்களிக்கும் மக்கள் முட்டாள்கள் என சொல்லாமல் சொல்லப்படுகிறது. சுமந்திரன் ஒரு நா.உறுப்பினராக ஒரு மாதம் பெறும் சம்பளம் ஒரு முழுநேர சட்டத்தரணியாக இருந்திருந்தால் ஒரே நாளில் சம்பாதித்திருப்பார்.

    ReplyDelete